வெண்டைக்காய் பச்சடி,ladies finger pachadi recipe in tamil,vendakkai pachadi

வெண்டைக்காய் (சிறிய துண்டுகளாக வெட்டியது) – கால் கிலோ,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
தயிர் – 1 கப்,
காய்ந்த மிளகாய் – 2,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிக்க.
தாளிக்க: எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 10.

வெண்டைக்காய் பச்சடி,ladies finger pachadi recipe in tamil,vendakkai pachadi

தேங்காயுடன் மிளகாய், உப்புச் சேர்த்து அரைத்து, தயிரில் கலக்கவும். சிறிய கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து, அதை தயிர் கலவையில் கொட்டவும். பெரிய கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், வெண்டைக்காய் துண்டுகளைப் பொரித்தெடுத்து, எண்ணெய் வடியும்படி ஒரு டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். பரிமாறுவதற்கு முன், பொரித்த வெண்டைக்காய்களை, தயிர் கலவையில் சேர்க்கவும். எல்லாவிதமான சாதங்களுக்கும் பொருத்தமான சைட் டிஷ் இது. முழுக்க சாப்பிட்டு முடிக்கிற வரையிலும், வெண்டைக்காய்
கரகரவென்றே இருக்கும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors