வெண்டைக்காய் வறுவல்,lady’s finger fry in tamil,vendakkai poriyal

Loading...

வெண்டைக்காய் – 1/2 கிலோ
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1/4 டீஸ்பூன்
அரிசி மாவு – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

வெண்டைக்காய் வறுவல்,lady's finger fry in tamil,vendakkai poriyal

செய்முறை:

முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின் நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

வெண்டைக்காயில் நீளவாக்கில் உள்ளவாறு கீறிவிட்டு நடுவில் கலந்து வைத்துள்ள மசலாக்களை நடுவில் வைத்து அரை மனி நேரம் ஊற வைக்கவும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து இறக்கினால், வெண்டைக்காய் வறுவல் தயார்.

Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors