சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக் ,manjal face pack in tamil,turmeric powder facial Beauty Tips Tamil

கடலை மாவு தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறும். ஆலிவ் ஆயில் உடலில் வளரும் தேவையில்லாத முடியை எளிதில் நீக்குவதற்கும், வளராமல் தடுப்பதற்கும், ஆலிவ் ஆயிலில் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். சந்தனப் பொடி மஞ்சள் தூளை, சந்தனப் பொடியுடன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி காய வைத்து கழுவினால், முகத்தில் இருக்கும் முகப்பரு போய்விடும். பால் பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி

சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக் ,manjal face pack in tamil,turmeric powder facial Beauty Tips Tamil

, சருமம் பொலிவோடு காணப்படும். அதுமட்டுமின்றி இதனை வெடிப்புள்ள உதட்டில் தடவி வந்தால், வெடிப்புகள் நீங்கிவிடும். எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி வந்தால், வெயிலால் மாறியிருந்த சருமத்தின் நிறம், மீண்டும் பழைய நிறத்திற்கு திரும்புவதோடு, சருமமும் பொலிவோடு மென்மையாக இருக்கும். தேங்காய் எண்ணெய் பாதங்களில் இருக்கும் வெடிப்புக்களை போக்குவதற்கு, தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, வெடிப்புள்ள பகுதியில் தடவி வந்தால், விரைவில் வெடிப்புக்கள் நீங்கி, பாதங்கள் மென்மையாக இருக்கும். மோர் பால் பொருட்களில் ஒன்றான மோருடன் மஞ்சள் தூளை சேர்த்து, சென்சிட்டிவ் பகுதிகளில் தேய்த்தால், சுருக்கங்கள் வராமல் இருக்கும்.

வெள்ளரிக்காய் ஜூஸ் வெளியே வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், பொலிவிழந்து இருக்கும் முகத்தை பொலிவாக்குவதற்கு, வெள்ளரிக்காய் சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தடவி மசாஜ் செய்து நீரில் அலச வேண்டும். தேன் சருமத்தில் உள்ள காயங்களை போக்கி, அழகான சருமத்தை பெறுவதற்கு, மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து, தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். தயிர் தயிருடன் மஞ்சள் தூளை சேர்த்து, முகத்திற்கு தடவி மசாஜ் செய்து வந்தால், சருமம் குளிர்ச்சியுடன் இருப்பதோடு, பொலிவோடும் இருக்கும். மஞ்சள் தூள் மஞ்சள் தூளை நேரடியாக சருமத்தில் தேய்த்து சருமத்தை கழுவினால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் கரும்புள்ளிகளையும், சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்திற்கு சரியான பாதுகாப்பும் கொடுக்கும்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors