முள்ளங்கியின் பயன்கள்,mullangi maruthuva payangal

மஞ்சள் முள்ளங்கியை காரட் என்ற பெயரில் புகழ் அடைந்துள்ள ஒரு கிழங்கு வகை காய். இதை கழுவி சமைக்காமலேயே சாப்பிடலாம். தினம் ஒரு காரட் சாப்பிட்டால் கண் மருத்துவரிடம் செல்லும் நிலை ஏற்படாது. இது மூளைக்கு நல்லது , தலை சுற்றல், மயக்கம் முதலியவற்றைத் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. சித்த பிரம்மையை போக்கும் வல்லமையுடையது. மூட்டு வலியை போக்கும், வாயுத்தொல்லை மற்றும் வாய் துர்நாற்றத்தை போக்க கூடியது.
சிவப்பு முள்ளங்கி

முள்ளங்கியின் பயன்கள்,mullangi maruthuva payangal
சிவப்பு முள்ளங்கிசிறு நீர்ப்பையைச் சுத்தமாக்கி சிறுநீரை முறைப் படுத்தும் நீர்க்குத்தலைப் போக்கும். வயிற்று பூச்சிகளை அழிக்கும் , சீரணத்தை எளிதாக்கும், மூலநோய்,வெள்ளை நோய் , பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். கண்ணெரிச்சலை நீக்கும் குணம் உடையது. எலும்புகளுக்கும் மூளைக்கும் பலம் தரும். வயிற்று புண்களை குணப்படுத்தக் கூடியது. உடல் சோர்வு, உடல் சூடு மற்றும் தோல்வறட்சி முதலியவற்றை போக்க கூடியது. தோலை வழவழப்பாக்கும் தன்மையுடையது. சிறுகுழைந்தைகளுக்கும், மழை காலங்களில் பெரியவர்களுக்கும் ஆகாது.
வெள்ளை முள்ளங்கி
வெள்ளை முள்ளங்கிசிறுநீரை ஒழுங்குப்படுத்தும், மூலநோய், தோல் வறட்சி, வயிற்றுப்போக்கு மற்றும் நீர்சுருக்கு போன்ற நோய்களை குணப்படுத்தும், சீதபேதியை கட்டுப்படுத்தும். எலும்புக்கு பலம் சேர்க்கும். மஞ்சள்காமாலைக்கு மிகவும் நல்லது. வாத நோய்க்காரர்கள் குறைவாக உண்ணலாம், மழைக்காலங்களில் வயதானவர்களுக்கும்,சிறு குழந்தைகளுக்கு ஆகாது. மாதவிடாய் காலங்களில் உண்டால் மாதவிலக்கு அதிகமாகும் இக்காலங்களில் தவிர்ப்பது நல்லது

Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors