முள்ளங்கி இறால் குருமா,mullangi prawn kuruma Seivathu eppidi,Prawn and Radish Curry Recipe in tamil

Loading...

தேவையான பொருட்கள்:

* இறால் – 1/2 கிலோ
* முள்ளங்கி – 1/4 கிலோ
* தயிர் – 1/2 கப்
* வெங்காயம் – 200 கிராம்
* பச்சை மிளகாய் – 4
* தக்காளி – 200 கிராம்
* தேங்காய் துருவல் – கால் மூடி
* பட்டை – 2
* லவங்கம் – 2
* இஞ்சி – சிறு துண்டு
* பூண்டு – 4 பல்
* எண்ணெய் – 1 குழிக்கரண்டி
* உப்பு – தேவையான அளவு

முள்ளங்கி இறால் குருமா,mullangi prawn kuruma Seivathu eppidi,Prawn and Radish Curry Recipe in tamil

செய்முறை:

* இறாலை நன்றாக சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.

* வெங்காயம், தக்காளி, மிளகாய் முள்ளங்கியை நறுக்கிக் கொள்ளவும்.

* தேங்காயை அரைக்கவும், இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக்கிக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும், பட்டை லவங்கம் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

* பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து இறாலையும் சேர்த்து வதக்கவும்.

* பின்னர் முள்ளங்கியையும் சேர்த்து வதக்கி நன்றாக வேகவிடவும்.

* தேவையான உப்பு, அரைத்த தேங்காயின் பாலையும் அதனுடன் சேர்க்கவும்.

* முள்ளங்கி மற்றும் இறால் நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

Loading...
Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors