முட்டைக்கோஸ் கூட்டு,cabbage kootu tamil style,muttaikose koottu samayal kurippu

முட்டைக்கோஸ் துருவியது – 1 1/4 கால் கப் (100 கிராம்)
துவரம் பருப்பு – 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு – 2 மேசைக்கரண்டி
தக்காளி – ஒன்று
தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 2
கல் உப்பு – 2 தேக்கரண்டி

முட்டைக்கோஸ் கூட்டு,cabbage kootu tamil style,muttaikose koottu samayal kurippu

முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய முட்டைக்கோஸை தண்ணீரில் அலசிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் தனித்தனி பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இட்லி பானையில் வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் அலசிய முட்டைக்கோஸை வைக்கவும்.

மூன்றையும் இட்லி பானையில் வைத்து மூடி 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். முட்டைக்கோஸில் தண்ணீர் ஊற்ற தேவையில்லை.

தேங்காய் துருவல், மிளகாய் வற்றல் மற்றும் சீரகம் மூன்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பருப்பு மற்றும் முட்டைக்கோஸ், மஞ்சள் தூள் போட்டு அடுப்பில் வைத்து நறுக்கின தக்காளி சேர்த்து கிளறவும். கூட்டுக்கு தண்ணீர் ஊற்ற தேவையில்லை பருப்பில் உள்ள தண்ணீரே போதும்.

அதன் பிறகு அரைத்த எடுத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

5 நிமிடம் கழித்து கொதித்ததும் உப்பு போட்டு கிளறி 2 நிமிடம் கொதிக்க விடவும். கலவை சற்று கெட்டியாக ஆகும் வரை கொதிக்க விடவும்.

வாணலியில் அல்லது தாளிப்பு கரண்டியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.

பிறகு இறக்கி வைத்த முட்டைக்கோஸ் கூட்டில் தாளித்த கடுகை ஊற்றி கறிவேப்பிலை போட்டு கிளறி 3 நிமிடம் கழித்து இறக்கவும்.

சுவையான முட்டைக்கோஸ் கூட்டு தயார். கூட்டு திக்காக வேண்டும் என்றால் ஒரு மேசைக்கரண்டி அரிசி மாவில் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்து அதை கூட்டில் கடுகு தாளிக்கும் முன் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கவும்.

இந்த முட்டைக்கோஸ் கூட்டு செய்முறையை திருமதி. மங்கம்மா அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors