மட்டன் ஈரல் மிளகு வறுவல்,mutton liver fry recipe in tamil

ஈரல் – 250 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சைமிளகாய் – 2
மிளகுத்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 5 இலை
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு,
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்.

மட்டன் ஈரல் மிளகு வறுவல்,mutton liver fry recipe in tamil

செய்முறை :

ஆட்டு ஈரலை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயை மிதமாக்கி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, இரண்டாக கீறிய பச்சைமிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டு ஈரல் சேர்த்து வதக்கவும்.

உள்ளங்கையளவு தண்ணீர் எடுத்துத் தெளித்து மூடி போட்டு வேக வைக்கவும்.

ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன், சீரகத்தூள், மிளகுத்தூள் தூவி மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

கடைசியில் சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors