கம்பு பச்சைப்பயறு கிச்சடி,pachai payaru kichadi,Healthy Recipes In Tamil

உடைத்த கம்பு – ஒரு கப்
பச்சைப்பயறு – கால் கப்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
இஞ்சித்துருவல் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு.

கம்பு பச்சைப்பயறு கிச்சடி,pachai payaru kichadi,Healthy Recipes In Tamil

செய்முறை :

உடைத்த கம்பு, பச்சைப்பயறை தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஒரு டேபிள்ஸ்பூன் விட்டு கிராம்பு, ஏலக்காய், பட்டை, இஞ்சித்துருவல் சேர்த்துத் தாளிக்கவும்.

அடுத்து அதில் வறுத்து வைத்திருக்கும் கம்பு, பச்சைப்பயறு சேர்த்துக் கிளறவும்.

இத்துடன் 3 கப் நீர் விட்டு கொதிக்க விடவும்.

உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி குக்கர் மூடியால் மூடவும். பிரஷர் வந்ததும், தீயை சிம்மில் வைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பிரஷர் அடங்கியதும், திறந்து மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

Loading...
Categories: Healthy Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors