பறங்கிக்காய் புளிக் கறி,parangikai puli curry,parangikai samayal kurippugal

தேவையான பொருட்கள்:-
பறங்கிக்காய் – 1/2 கிலோ
தக்காளி – 2
வெங்காயம் – 2
பூண்டு – 12 பல்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
தேங்காய் – 1 சில்லு
எண்ணெய் – 50 கிராம்
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – கொஞ்சம்
சாம்பார்ப் பொடி – கொஞ்சம்

பறங்கிக்காய் புளிக் கறி,parangikai puli curry,parangikai samayal kurippugal

செய்முறை:-
பறங்கிக்காயைக் கழுவிச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டின் தோலை உரித்துக் கொள்ளவும்.
தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைக்கவும்.
வாணலியில் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை வறுத்துத் தூளாக்கிக் கொள்ளவும்.
மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், வெந்தயம், கறிவேப்பிலையைத் தாளித்து, தக்காளி, வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி, பறங்கிக் காய்த் துண்டுகளைப் போட்டுக் கிளறி விடவும்.
சாம்பார்ப் பொடி, உப்பு போடவும்.
ஊறிய புளியைக் கரைத்து ஊற்றவும்.
பறங்கிக் காய் வெந்ததும், அரைத்த தேங்காயையும் வறுத்த மிளகு, சீரகம், சோம்புப் பொடிகளையும் போடவும்.
எல்லாம் வெந்து கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors