பாகற்காய் கூட்டு,pavakkai kootu in tamil,bitter gourd kootu

பாகற்காய் – அரைக்கிலோ,
கடலைப்பருப்பு – அரைக்கோப்பை,
பச்சைமிளகாய் – ஐந்து,
வெங்காயம் – இரண்டு[விருப்பப்பட்டால்],
தக்காளி – நான்கு,
தக்காளி பேஸ்ட் – ஒரு மேசைக்கரண்டி,
இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு – இரண்டு பற்கள் [விருப்பப்பட்டால்],
தனியாத்தூள் – அரை தேக்கரண்டி,
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி,
எண்ணெய் – கால்கோப்பை,
கடுகு – ஒரு தேக்கரண்டி,
சீரகம் – ஒரு தேக்கரண்டி,
கறிவேப்பிலை – இரண்டு கொத்து,
உப்புத்தூள் – இரண்டு தேக்கரண்டி.

பாகற்காய் கூட்டு,pavakkai kootu in tamil,bitter gourd kootu

கடலைப்பருப்பை ஊறவைத்து வேகவைக்கவும். பாகற்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு தேக்கரண்டி உப்புத்தூளை பிசறி அரை மணி நேரம் ஊறவைத்த பிறகு நன்கு கழுவி வடித்து வைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். தக்காளியை நொறுங்க நறுக்கி கொள்ளவும். இஞ்சி பூண்டை நசுக்கி கொள்ளவும். சட்டியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து கடுகைப் பொரியவிடவும். தொடர்ந்து சீரகம் கறிவேப்பிலையை போட்டு வறுக்கவும். பின்பு வெங்காயத்தை கொட்டி சிவக்க வறுத்து தனியே எடுத்துவிடவும். பின்பு பாகற்காயை கொட்டி சிவக்க வறுபட்டவுடன் அதையும் ஒரு தட்டில் கொட்டவும். தொடர்ந்து அதே சட்டியில் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூளைப் போட்டு அதை தொடர்ந்து பச்சைமிளகாய், மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு அதில் வேகவைத்துள்ள கடலைப்பருப்பு, தக்காளி பேஸ்ட், வறுத்து வைத்துள்ள வெங்காயம், உப்புத்தூள், பருப்பு வெந்த தண்ணீர் ஒரு கோப்பை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பருப்பு முழுவதும் வெந்தவுடன் வறுத்த பாகற்காயைக் கொட்டி நன்கு கலக்கி விட்டு மேலும் ஐந்து நிமிடம் வேகவைத்து இறக்கி விடவும். இந்த கூட்டை தேங்காய் எண்ணெயில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors