பாகற்காய் வறுவல்,bitter gourd fry in tamil,pavakkai varuval seivathu eppadi

தேவையான பொருட்கள்:

பாகற்காய் : 100 கிராம்
உப்பு : தேவையான அளவு
மிளகாய் தூள் : 1/2 டீஸ்பூன்
அரிசி மாவு : 1 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் : தேவையான அளவு
எண்ணெய் : 50 கிராம்

பாகற்காய் வறுவல்,bitter gourd fry in tamil,pavakkai varuval seivathu eppadi

செய்முறை:

பாகற்காயை கழுவி வட்ட வில்லைகளாக அரியவும். உப்பு, மஞ்சள் தூள் தூவி வைக்கவும்.

பத்து நிமிடங்களில் பாகற்காயும், தண்ணீருமாக இருக்கும் அந்த தண்ணீரை தனியாக பிரித்து‌‌விடவு‌ம்.

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் மிளகாய்த் தூள், பெருங்காயம், அரிசி மாவு, சிறிது உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைக்கவும்.

பாகற்காய் வில்லைகளை மாவில் தோய்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வில்லைகளைப் போட்டுப் பொன்னிறமாக பொரிக்கவும்.

சுவையான பாகற்காய் வறுவல் தயார்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors