பூசணிக்காய்  - தட்டாம்  பயறு  கறி,poosanikai payaru curry tamil samayal

பூசணிக்காய் – 300 கிராம்,
தட்டாம் பயறு – 100 கிராம்,
வெல்லம் – 5 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 10,
பச்சை மிளகாய் – 4,
தக்காளி – 2,
துருவிய தேங்காய் – 1/4 மூடி.

அரைக்க…

தேங்காய் – 1/4 மூடி,
புளி – கோலிக்குண்டு அளவு,
பச்சை மிளகாய் – 1,
தக்காளி – 1,
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்.

தாளிக்க…

நல்லெண்ணெய் – தேவைக்கு,
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை,
கொத்தமல்லி இலை – சிறிது.

பூசணிக்காய்  - தட்டாம்  பயறு  கறி,poosanikai payaru curry tamil samayal

தட்டாம் பயறை முதல் நாள் இரவில் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். பூசணிக்காயை நறுக்கி விதை எடுத்து நன்றாக அலசவும். தோல் எடுக்காமல், ஒரு இஞ்ச் அளவுக்கு கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். தட்டாம் பயறோடு நறுக்கிய அனைத்தையும் கலந்து, அரைத்ததை சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் அடித்தவுடன் இறக்கவும். பூசணி சீக்கிரம் மசிந்து போய் விடாமல் சரியாக வேக வேண்டும். இப்போது தேங்காய் துருவல், வெல்லம் சேர்க்கவும். தாளிக்க கொடுத்தவற்றை தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors