பூசணி சாலட்,pumpkin salad in tamil

பூசணி சாலட்
தேவையானவை:
துருவிய பூசணி – ஒன்றரை கிண்ணம்
அவல் – ஒரு கிண்ணம்
தயிர் – ஒரு கிண்ணம்
தாளிக்க
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
உளுந்து – கால் தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1
கொத்துமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – சிறிது
காய்ந்த மிளகாய் – 1
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.

 

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

செய்முறை:
பூசணித் துருவலில் இருக்கும் தண்ணீரை ஒரு கிண்ணத்தில் லேசாகப் பிழிந்துவிட்டு, துருவலை மட்டும் தனியாக வேறொரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். அவலை லேசாக தண்ணீரில் அலசி பிழிந்து, பூசணி தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு துருவிய பூசணி, ஊறிய அவல், தயிர், உப்பு எல்லாவற்றையும் கலந்து வைத்து கொண்டு, எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் போட்டு தாளித்து, இந்தக் கலவையில் கொட்டி கலந்து விடவும். இறுதியாக நறுக்கி வைத்த கொத்துமல்லித்தழையைத் தூவி பரிமாறலாம்.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors