சுரைக்காய் சாதம்,sorakkai sadam tamil samayal kurippu

Loading...

அரிசி – 1 கப்
சுரைக்காய் – 1 கப்(பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 / 2
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
சோம்பு – 1 / 2 தேக்கரண்டி
கடுகு – 1 / 2 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிதளவு
நிலக்கடலை அல்லது முழு தட்டபயறு – 1 மேசைக்கரண்டி (விருப்பமெனில்)
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 / 2 தேக்கரண்டி
நெய் – 1 / 2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சுரைக்காய் சாதம்

சுரைக்காய் சாதம்,sorakkai sadam tamil samayal kurippu

செய்முறை
சுரைக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.அல்லது துருவிக் கொள்ளலாம்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி கடுகு,பச்சை மிளகாய், கருவேப்பில்லை,சோம்பு போட்டு தாளிக்கவும்.
பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியவுடன் சுரைக்காய் , நிலக்கடலை அல்லது முழு தட்டபயறு,மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு போட்டு சுரைக்காய் முக்கால் பாகம் வேகும் வரை மூடி போட்டு வேக வைக்கவும்.
அரிசியை நன்றாக கழுவி குக்கரில் உள்ள கலவையுடன் கலந்து (3 1 /2 கப் தண்ணீர்)
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
ஒரு விசில் வந்தவுடன் இறக்கி விடலாம்.

Loading...
Loading...
Categories: Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors