சுரைக்காய் குருமா,Surakai Kuruma ,Surakai Recipes list in tamil

Loading...

தேவையான பொருட்கள்: சுரைக்காய் – 1/4 கிலோ சீரகம் – 1/2 டீஸ்பூன் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன் தக்காளி – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 அல்லது மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மல்லி தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது அரைப்பதற்கு… துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன் கசகசா – 1 டீஸ்பூன் செய்முறை: முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு,

சுரைக்காய் குருமா,Surakai Kuruma ,Surakai Recipes list in tamil
சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் சுரைக்காயை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து சுரைக்காய் நன்கு வேகும் வரை 7-10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அதற்குள் மிக்ஸியில் தேங்காய் மற்றும் கசகசா சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் 4-5 முந்திரியை சேர்த்துக் கொண்டால், குருமா இன்னும் சுவையாக இருக்கும். இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சுரைக்காயுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், சுரைக்காய் குருமா ரெடி!!!

Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors