தக்காளி சேமியா,tomato semiya in tamil

Loading...

பெங்களூர் தக்காளி – 3,
எண்ணெய் – 1½ டேபிள்ஸ்பூன்,
சேமியா – 200 கிராம்,
கரம்மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
உப்பு – தேவைக்கு,
மிளகாய்த்தூள் – தேவைக்கு,
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது.

தக்காளி சேமியா,tomato semiya in tamil

வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் 2 லிட்டர் தண்ணீர், 1/2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், சிறிது உப்பு, சேமியாவைச் சேர்த்து வேகவைத்து இறக்கவும். தண்ணீரை வடித்து சேமியாவை தட்டில் பரப்பி வைக்கவும். மற்றொரு கடாயில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சைவாசனை போக வதக்கி, வெங்காயம், கரம்மசாலாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு சேமியாவை போட்டு குழையாமல் பிரட்டி இறக்கவும். கறிேவப்பிலையால் அலங்கரித்து பரிமாறவும்.

Loading...
Loading...
Categories: noodles recipes in Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors