வறண்ட கூந்தலுக்கு கடுகு எண்ணெய்,varanda sarumam thukku kadugu ennai ,kadugu ennai usage in tamil

#1 வெந்தயம் , யோகார்ட் மற்றும் கடுகு எண்ணெய் மாஸ்க் : கடுகு எண்ணெய் கூந்தலை மிருதுவாகவும் மற்றும் பொலிவானதாகவும் மாற்றும். யோகார்ட் ஒரு நல்ல கண்டிஷராக செயல்படுகிறது. வெந்தயம் உங்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை தருகிறது. இதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொண்டால் கூடுதல் பொலிவை பெறலாம். தேவையான பொருட்கள் #1: இரவில் ஊற வைத்த வெந்தயம் 1 கப் யோகார்ட் 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய் ஆலிவ் ஆயில் செய்முறை #1: ஊற வைத்த வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் யோகார்ட், ஆலிவ் ஆயில் மற்றும் கடுகு எண்ணெய் இவற்றை கலக்க வேண்டும். உங்கள் முடியின் நீளத்திற்கு தகுந்தமாறி

 

வறண்ட கூந்தலுக்கு கடுகு எண்ணெய்,varanda sarumam thukku kadugu ennai ,kadugu ennai usage in tamil

பொருட்களின் அளவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்களது ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் நன்கு தடவ வேண்டும். பிறகு மைல்டு சாம்பு போட்டு அலச வேண்டும். இப்பொழுது உங்கள் தலைமுடி மிருதுவாகவும் மற்றும் ஈரப்பதத்துடனும் இருப்பதை காணலாம். #2 எண்ணெய் பராமரிப்பு முறை : விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்துக் தலைமுடியில் தடவினால் வறண்ட கூந்தல் காணாமல் போகும். தேவையான பொருட்கள் #2: உங்கள் கூந்தலின் நீளத்திற்கு தகுந்தமாறு எண்ணெய்களை சமமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2: இந்த எண்ணெய் கலவையை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி, ஒரு வெதுவெதுப்பான டவலை கொண்டு கட்டிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் நேரம் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மைல்டு சாம்பு போட்டு அலசி விடுங்கள். கூந்தல் பட்டு போன்று மாறி இருக்கும். #3 வாழைப்பழம் மற்றும் கடுகு எண்ணெய் மாஸ்க் : வாழைப்பழம் ஒரு நல்ல கண்டிஷனர் ஆகும். ஏனெனில் இதில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இந்த சத்துக்கள் உங்கள் முடியின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. தேவையான பொருட்கள் #3 : 1 வாழைப்பழம் 1/4 கப் யோகார்ட் 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய்

செய்முறை #3 : வாழைப்பழத்தை ஸ்பூன் கொண்டு நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பிறகு யோகார்ட், கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இந்த மாஸ்க்கை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு சாம்பு போட்டு அலசி விட வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் நல்ல பலனை காணலாம். #4 கற்றாழை மற்றும் கடுகு எண்ணெய் மாஸ்க் : கற்றாழை ஒரு அற்புதமான மாய்ஸ்சரைசர். இந்த கலவை முடி வளர்ச்சியை தூண்டும். தேவையான பொருட்கள் #4: கடுகு எண்ணெய் தேவையான அளவு 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் செய்முறை #4: இந்த இரண்டையும் கலந்து ஸ்கால்ப் மற்றும் தலையில் தடவிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் நேரம் கழித்து மைல்டு சாம்பு போட்டு அலசுங்கள். இப்பொழுது உங்கள் கூந்தல் அலை பாயும். இந்த குறிப்புகள் உங்களுக்கு மிகவும் சுலபமானதாகவும் மற்றும் பயனுள்ளதாகவும் இருக்கும். இன்னும் ஏன் வைட் பண்ணுரிங்க உங்கள் கூந்தலை அழகாக மாற்றி இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைங்க.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors