வெண்டைக்காய் கூட்டு,vendakkai kootu,lady finger recipe list in tamil

வெண்டைக்காய் – 1/4 கிலோ
துவரம்பருப்பு – 2 கரண்டி வேக வைத்து மசித்தது
புளி – நெல்லிக்காய் அளவு
மல்லிப்பொடி – 2 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பெருங்காயப் பொடி – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
வெல்லம் – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு

வெண்டைக்காய் கூட்டு,vendakkai kootu,lady finger recipe list in tamil

செய்முறை :
புளியை 1-1/2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி உப்பு, மஞ்சள் பொடி,
மிளகாய்பொடி, மல்லிப்பொடி, வெல்லம் கலந்து கொதிக்க வைக்கவும்.
வெண்டைக்காயைக் கழுவி, துடைத்து கொஞ்சம் நீளமாக நறுக்கி கொதிக்கும்
புளியில் போட்டு குழையாமல் வேக வைக்கவும். பருப்பைக் கலந்து கிளறி
கொதிக்க வைத்து கெட்டியானதும், எண்ணெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு,
பெருங்காயம் தாளித்து தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை போட்டு வதக்கி
கூட்டில் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors