வெண்டைக்காய் முட்டை பொரியல்,vendakkai muttai poriyal,ladies finger egg fry

வெண்டைகாய் – அரை கிலோ
முட்டை – 2
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
கடுகு – 1 டீஸ்பூன்
உ.பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு ,சீரகத்தூள் – கால்,கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் – பின்ச்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை- 2 இணுக்கு
எலுமிச்சை – பாதி (விருப்பப்பட்டால்)
உப்பு – தேவைக்கு
வெண்டைக்காய் முட்டை பொரியல்,vendakkai muttai poriyal,ladies finger egg fry

வெண்டைகாயை நன்கு கழுவி துடைத்து சிறியதாக கட் செய்து கொள்ளவும்.முட்டையை,மிளகு,சீரகத்தூள்,உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து அடித்து வைக்கவும்.வெங்காயம் கட் செய்து வைக்கவும்.மிளகாய் நீளமாக கட் செய்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை,மிளகாய் தாளித்து வெங்காயம் வதக்கவும்,பின்பு வெண்டைகாய் சேர்த்து வதக்கி ,உப்பு சேர்த்து ,விருப்பப்பட்டால் பாதி எலுமிச்சை பிழிந்து சுருளா வதக்கவும்.
பின்பு அடித்து வைத்த முட்டை சேர்த்து வெந்தவுடன் பிரட்டவும்.
சுவையான வெண்டைக்காய் முட்டை பொரியல் ரெடி.சூடாக சாததிற்கு தொட்டுக்கொள்ள பரிமாறவும்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors