வெந்தயக் கீரையை வீட்டிலேயே வளர்க்க,vendhaya keerai maadi thottam

வெந்தயக்கீரையை கடைகளில் வாங்குவதை விட வீட்டில் உற்பத்தி செய்வது எளிது. ஒரு ட்ரேயில் வெந்தயச்செடி வளர்க்கத் தேவைப்படும் அளவுக்கு மணல், தேங்காய் நார், எரு ஆகியவற்றை எடுத்துக் கலந்து கொள்ளுங்கள். தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். அதை முளைகட்டிய பிறகு எடுத்துப் பயன்படுத்துவது நல்லது. அப்போதுதான் உடனே முளைக்கும். வெந்தயத்தை ஒரு தொட்டியில் தூவி, அந்த விதைகள் மூடும்படி மண் கலவையைத் தூவி விடுங்கள்.

வெந்தயக் கீரையை வீட்டிலேயே வளர்க்க,vendhaya keerai maadi thottam

மேல்புறம் தேங்காய் நார் போட்டும் மூடலாம். இதை சரியாகச் செய்தால் 5 நாட்களில் செடி முளைத்து வந்துவிடும். தண்ணீரை அப்படியே ஊற்றாமல் ஸ்ப்ரே தெளிப்பது போல தெளித்தால் செடி உடையாமல் இருக்கும். வெந்தயக்கீரை வளர்க்க வெயில் தேவைப்படும் என்பதால் அதை ஜன்னல் ஓரமாக வைக்க வேண்டும். உரம் தேவையில்லை. விதை முளைத்து வந்த 10 நாட்களுக்குள் வெந்தயக்கீரை வளர்ந்துவிடும். அதே தொட்டியில் மறுபடியும் வெந்தயம் பயிரிடலாம். இப்படி எளிமையான முறை யில், குறைந்த காலத்தில் வளர்க்கலாம் வெந்தயச் செடி!

Loading...
Categories: Vivasayam | விவசாயம்

Leave a Reply


Sponsors