வெந்தயக் கீரை சாதம்,vendhaya keerai sadam in tamil

கீரை 1 கட்டு
மிளகாய் வற்றல் 4
கடலை பருப்பு 4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 3 ஸ்பூன்
தனியா 2 ஸ்பூன்
எண்ணெய் 5 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
தேவையானால் சிறிய பத்தை தேங்காய்

 

வெந்தயக் கீரை சாதம்,vendhaya keerai sadam in tamil

செய்முறை

கீரையைச் சுத்தம் செய்து, கழுவி, பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும். வெறும் வாணலியில் 2 ஸ்பூன் கடலை பருப்பு, 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் இவற்றை வறுத்து தேங்காயுடன் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பருப்புகளை கடுகு வெடித்ததும் போட்டு, மஞ்சள் தூள், சிறிது பெருங்காயத்தூளுடன் போட்டுக் கீரையையும் போட்டு வதக்கவும்.

சற்று வதங்கிய பின்னர், கெட்டியாக புளியைக் கரைத்து ஊற்றி, கொதிக்க விடவும். தேவைக்கேற்ப உப்புப் போடவும். சற்று புளி வாசனை போனதும் தேவையானால் சிறிய கட்டி வெல்லமும் சேர்க்கலாம். பிறகு அரைத்துப் பொடி செய்து வைத்துள்ள பொடியைக் கொட்டி இறக்கவும். பொல பொலவென்று சாதம் வடித்து, ஆறவிட்டு கிளறி மூடி வைக்கவும்

Loading...
Categories: arokiya unavu in tamil, Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors