வெந்தயக் கீரை சேப்பங்கிழங்கு குழம்பு,vendhaya keerai seppa kilangu kulambu

Loading...

வெந்தயக் கீரை – 1 கட்டு,
சேப்பங்கிழங்கு – 100 கிராம்,
வெங்காயம் – 1,
தக்காளி – 2,
இஞ்சி – பூண்டு விழுது – சிறிது,
குழம்பு மிளகாய் தூள் – சிறிது,
மஞ்சள் தூள் – கால் சிட்டிகை,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது.

வெந்தயக் கீரை சேப்பங்கிழங்கு குழம்பு,vendhaya keerai seppa kilangu kulambu

அரைப்பதற்கு:
தேங்காய்த் துருவல் – 2
டீஸ்பூன், சோம்பு, கசகசா – தலா கால் டீஸ்பூன்,
பொட்டுக்கடலை – அரை டீஸ்பூன்.

சேப்பங்கிழங்கை தோல் மட்டும் நீக்கி, வேக வைக்காமல், சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெந்தயக் கீரையை அலசி, நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். சேப்பங்கிழங்கு சேர்த்து வதக்கவும். பிறகு வெந்தயக் கீரையும் சேர்த்து வதக்கி, உப்பு, குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பிரஷர் குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும். அல்லது நன்கு கொதிக்கும் போது, குக்கரில் வெயிட் போட்டு, குறைந்த தணலில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.

Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors