உங்க பாத்ரூம் ஆல் டைம் பளபளக்கனுமா ,bathroom cleaning tips in tamil

சுத்தம் சுகாதாரம், சுத்தம் சோறிடும் என்று சொல்வார்கள். ஆமாங்க அப்படிப்பட்ட சுத்தத்தை நாம் எங்கும் பேணிக் காத்தால் நாமும் ஆரோக்கியமாக வாழலாம் என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்த பழமொழி நம்ம வீட்டு பாத்ரூம் சுத்தத்திற்கும் பொருந்தும்.

ஏனெனில் பெரும்பாலான கிருமிகள் அங்கிருந்து தான் நம் உடலை தாக்கவும் செய்கின்றனர். எனவே தான் உங்கள் பாத்ரூமை சுத்தப்படுத்த எண்ணும் போது கண்டிப்பாக சில முக்கியமான விஷயங்களை மனதில் கொண்டும் செயல்பட வேண்டியிருக்கிறது .

நமது உடல் கழிவுகளை வெளியேற்றும் கழிப்பறையை நாம் சுத்தமாக வைத்துக் கொண்டால் தான் கொடிய நோய்க் கிருமிகளிலிருந்து நமது உடலை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே பாத்ரூமை எப்பொழுதும் தூய்மையாக பளபளப்பாக வைத்துக் கொள்வது நமது கடமை மட்டுமல்ல நமது அவசியமும் கூட.

உங்க பாத்ரூம் ஆல் டைம் பளபளக்கனுமா ,bathroom cleaning tips in tamil

கண்டிப்பாக எல்லாருமே பாத்ரூம்க்குள் நுழையும் போதே முகம் சுளிக்காமல் எந்த வித அருவருப்பு இல்லாத ஒரு நிலையை தான் எதிர்பார்ப்போம் அல்லவா. பாத்ரூம் தூய்மையான மணத்துடன் காணப்படுவதை தான் எல்லாரும் விரும்பவும் செய்வார்கள்.

ஆனால் இப்படி தூய்மையாக வைத்திருப்பது ஒன்னும் எளிதான மேஜிக் செயல் கிடையாது. நீங்கள் தினமும் உங்கள் பாத்ரூமை சுத்தப்படுத்தும் பழக்கத்தை மேற்கொண்டால் அதுவும் சாத்தியமே.

இதை செய்வதற்கு நீங்கள் ரெம்பவும் கஷ்டப்படாமல் இருக்க எங்களிடம் சில டிப்ஸ்கள் இருக்கு. இதை தொடர்ந்து பின்பற்றினாலே போதும் தூய்மையான பாத்ரூம் உடன் ஆரோக்கியமான உடல் நலமும் பரிசாக கிடைக்கும்.

எனவே இந்த பழக்கத்தை கொண்டு தினமும் பாத்ரூம் தூய்மையில் செயல்பட்டாலே போதும். சரி வாங்க அந்த டிப்ஸ்களை இப்பொழுது பார்க்கலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தினமும் குப்பைகளை நீக்குதல்
தினமும் குப்பைகளை நீக்குதல்
தினமும் உங்கள் பாத்ரூமில் போடப்படும் குப்பை பேக்குகளை அகற்றி தூய்மையாக வைத்து கொள்ளுங்கள். அப்படி முழுமையாக அகற்றாவிட்டால் இந்த குப்பைகள் சேர்ந்து ஒரு மோசமான துர்நாற்றத்தை வீச ஆரம்பித்து விடும். எனவே தினமும் குப்பை தொட்டியில் போடும் குப்பைகளை முழுமையாக அப்புறப்படுத்தி விடுங்கள்

குளித்த பிறகு சுவர்களை கழுவுதல்
குளித்த பிறகு சுவர்களை கழுவுதல்
நீங்கள் ஒவ்வொரு முறையும் குளித்த பிறகு கொஞ்சம் நேரம் எடுத்து உங்கள் பாத்ரூம் சுவர்களை தண்ணீர் ஊற்றி அப்பவே கழுவி விடுங்கள். கொஞ்சம் வினிகர் மற்றும் தண்ணீர் சேர்ந்த கலவையை ஊற்றினாலே போதும் உங்கள் பாத்ரூம் சுவர் பளபளக்கும்.

எனவே ஒவ்வொரு முறையும் இந்த மேஜிக் கலவையை சுவர்களில் ஊற்றி மயாஜாலம் செய்ய மறந்துவிடாதீர்கள். பிறகு எப்பவாவது நேரம் கிடைக்கும் போது பிரஷ் கொண்டு சுவர்களை தேய்த்து கழுவினால் போதும்.

ஷவரை சுத்தம் செய்ய மறந்துவிடாதீர்கள்

ஷவரை சுத்தம் செய்ய மறந்துவிடாதீர்கள்
நீங்கள் ஒவ்வொரு முறையும் தூங்குவதற்கு முன்பு உங்கள் ஸ்ஷவரையும் சுத்தம் செய்ய மறந்துவிடாதீர்கள். சுத்தம் செய்து பாருங்கள் காலையில் ஒரு புதிய ஸ்ஷவரலில் ஒரு புது குளியல் போட்டு விடலாம்.

டாய்லெட் கறை நீக்கி
டாய்லெட் கறை நீக்கி
உங்கள் டாய்லெட் அழுக்கான கறைகளால் படிந்து காணப்படுகிறதா. கவலையை விடுங்க. ஒரு 3 கப் வினிகரை உங்கள் டாய்லெட்டில் ஊற்றி விடுங்கள். பிறகு 3 விநாடிகள் கழித்து பாத்ரூம் பிரஷ்யை கொண்டு தேய்க்க வேண்டும். பிறகு பாருங்கள் உங்கள் டாய்லெட் கறைகள் காணாமல் போய்விடும்.

இதே மாதிரி நீங்கள் வெண்காரத்தையும் பயன்படுத்தலாம். இதற்கு வெண்காரத்தை கறை உள்ள இடங்களில் தூவி விட்டு 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பிறகு தேய்த்து கழுவினால் போதும் பளபளக்கும் டாய்லெட் ரெடி.

ஆடையை பாத்ரூம் ஹேம்பரில் மாட்டவும்
ஆடையை பாத்ரூம் ஹேம்பரில் மாட்டவும்
சில பேர்கள் குளிக்கும் போது தங்கள் ஆடைகளை பாத்ரூம் சுவரில் போட்டு விட்டு குளிப்பர். இதனால் உங்கள் பாத்ரூம் அழுக்கு ஆடைகளால் நிறைந்து பார்ப்பதற்கு அசுத்தமாக காணப்படும். எனவே இனி குளிக்கும் போது ஆடைகளை பாத்ரூம் ஹேம்பரில் மாட்டி குளித்து விட்டு அப்புறப்படுத்தி விட வேண்டும். இதனால் பாத்ரூம் அழுக்கு துணிகள் நிறைந்து வழியாமல் சுத்தமாக காணப்படும்.

பாத்ரூம் டப்பை உலர்த்த வேண்டும்
பாத்ரூம் டப்பை உலர்த்த வேண்டும்
ஒவ்வொரு முறையும் நீங்கள் குளித்த பிறகு பாத்ரூம் டப்பை ஈரப்பதம் இல்லாமல் உலர்த்தி வைக்க வேண்டும். இதனால் அதில் கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வளராமல் பாதுகாக்க முடியும்.

இதே மாதிரி உங்கள் பாத்ரூம் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் போன்றவற்றையும் உலர வைத்து விட்டால் தண்ணீர் கறைகள் மற்றும் கால்சியம் போன்றவை அதில் தங்குவது தடுக்கப்படும்.

என்னங்க இந்த தினசரி பழக்கத்தை உங்கள் பாத்ரூமில் சோம்பேறித்தனம் பார்க்காமல் செய்து வந்தால் உங்கள் பாத்ரூம் பளபளப்பதோடு ஆரோக்கியமான நோயில்லாத வாழ்வு வாழலாம்.

Loading...
Categories: Veettu Kurippugal TIps

Leave a Reply


Sponsors