நண்டு புட்டு,nandu puttu samayal kurippu,How To Make Chettinad Crab puttu in tamil

தேவையான பொருட்கள் :

நண்டு, நண்டு ஸ்டிக்ஸ் – அரை கிலோ
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
எலுமிச்சை ஜூஸ் – சிறிது,
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 2
தட்டிய பூண்டு – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

நண்டு புட்டு,nandu puttu samayal kurippu,How To Make Chettinad Crab puttu in tamil

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.

நண்டு மற்றும் நண்டு கொடுக்கை நன்றாக கழுவி அதனுடன் உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சத்தூள், வினிகர் சேர்த்து பிரட்டி வேக வைக்கவும்.

நண்டு நன்றாக வெந்து ஆறியதும் நண்டின் ஓட்டை எடுத்து விட்டு சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] சீரகத்தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகுத்தூள், உப்பு கொஞ்சம் சேர்த்து நன்கு மசாலா வாடை போகுமாறு பிரட்டி விடவும்.

அடுத்து அதில் உதிர்த்து வைத்துள்ள நண்டு சதை பகுதியை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி விடவும்.

நண்டு நன்றாக உதிரியாக வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து சும்மா ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைக்கவும்.

சூப்பரான நண்டு புட்டு தயார்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors