காராமணி உருண்டை மோர்க் குழம்பு,karamani urundai mor kulambu

காராமணி – 1/4 கப்,
சிவப்பு மிளகாய் – 2,
உப்பு – தேவையான அளவு.

குழம்பு செய்ய…

கடைந்த மோர் – 1 கப்,
உப்பு – தேவையான அளவு,
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் – 2,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 3 டீஸ்பூன்.

 

காராமணி உருண்டை மோர்க் குழம்பு,karamani urundai mor kulambu

தாளிக்க…

எண்ணெய் -1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்.

காராமணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து அதை சிறு உருண்டைகளாக உருட்டி இட்லிப் பானையில் வேக விடவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகாயை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதை தேங்காய், சீரகத்துடன் விழுதாக அரைத்து கடைந்த மோரில் சேர்த்து கொதிக்க விடவும். உப்பு சேர்த்து நன்கு பொங்கி வந்தவுடன் தாளிக்க சொன்ன பொருட்களை தாளித்து சேர்க்கவும். வேக வைத்த காராமணி உருண்டைகளையும் சேர்த்து கலந்து சூடான சாதத்துடன் பரிமாறவும்

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors