கர்ப்பத்தடை மாத்திரை நடுவில் ஒரு நாள் சாப்பிட மறந்தால் என்னாகும் தெரியுமா, karukalaippu tablet tips in tamil

கர்ப்பத்தடை மாத்திரை : பொதுவாக இந்த கர்பத்தடை மாத்திரைகளில் ப்ரோஜெஸ்டின் மற்றும் ஈஸ்ட்ரோஜோன் கலந்திருக்கும். இவை பெண்கள் உடலில் கருமுட்டை உற்பத்தியை தவிர்க்கச் செய்கிறது. இந்த கர்ப்பத்தடை மாத்திரிகைகளில் பல வகைகள் இருக்கின்றன. ஆனால் கிட்டத்தட்ட எல்லாமே ஒரே மாதிரி தான் பயன்படுத்தப்படுகிறது. சிலவற்றில் இரண்டு ஹார்மோன்களும் சிலவற்றில் ப்ரோஜெஸ்டீன் மட்டுமே இருக்கக்கூடிய மாத்திரைகளும் இருக்கின்றன. ப்ரோஜெஸ்டீன் மாத்திரைகளை விட இரண்டு ஹான்மோன்களும் இருக்கக்கூடிய மாத்திரைகள் தான் சிறந்தது.

கர்ப்பத்தடை மாத்திரை நடுவில் ஒரு நாள் சாப்பிட மறந்தால் என்னாகும் தெரியுமா, karukalaippu tablet tips in tamil

 

நல்லது : இது கர்ப்பத்தை தவிர்ப்பதைத் தாண்டி ஏராளமான நன்மைகளை பெண்களுக்கு அளிக்கிறது. மாதவிடாய் சுழற்சியை சீராக்கும். அதைவிட மாதவிடாய் காலங்களில் ஏற்படுகிற உடல் வலி, வயிற்று வலி போன்றவற்றை ஏற்படாமல் தவிர்க்கச் செய்திடும். இது ஒரு வகையில் சருமத்திற்கும் நன்மை தரும் என்று சொல்லப்படுகிறது. கர்பப்பையில் ஏற்படுகிற கட்டி, புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படமல் தடுக்கிறது. வகைகள்: ஏற்கனவே சொன்னது போல இந்த கர்ப்பத்தடை மாத்திரைகளில் பல வகைகள் இருக்கிறதென்றாலும் முறையான மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்வது தான் சிறந்தது. அவர், உங்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு, நீங்கள் சாப்பிட வேண்டும் என்று கொடுக்கிற மருந்துகளை சரியாக பின்பற்ற வேண்டும். சாப்பிடும் முறை : இது பெரும்பாலும் சிறந்த பலனைத் தரக்கூடியது. கர்ப்பமாவதை தடுக்கும் ஆற்றல் இதற்கு நிச்சயம் உண்டு. ஆனால் இதனை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

 

மாத்திரை அட்டைகளில் இருக்கிற மாத்திரையை பிரிக்கும் போது. இடமிருந்த வலமாகத்தான் சாப்பிடவேண்டும்.கடைசியாக இருப்பது ப்ளசிபோ என்ற மாத்திரை. இதைச் சாப்பிட்டதும் உங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். இடைவேளி : முதல் பேக்கேஜ் முடிந்ததும் அப்படியே விட்டுவிடக்கூடாது… தொடர்ந்து மறுநாளே உங்களது இரண்டாவது பேக்கேஜை தொட வேண்டும். இரண்டுக்கும் நடுவில் இடைவேளி கூடாது. கர்பத்தடை மாத்திரைகளை இதற்கு முன்னர் பயன்படுத்தவில்லை. தற்போது தான் முதன்முறையாக பயன்படுத்துகிறீர்கள் என்றால் மாதவிடாய் ஆரம்பித்த முதல் தேதியிலிருந்து நீங்கள் ஆரம்பிக்கலாம். நடுவில் மாத்திரிய மறந்துவிட்டால் : கர்ப்பத்தடை மாத்திரைகளை சாப்பிடுவதற்காக ஆரம்பித்துவிட்டு நடுவில் ஒரு நாள் சாப்பிட மறந்து விட்டால்? இது கர்ப்பத்தடை மாத்திரை பயன்படுத்துகிற எல்லாருக்கும் ஏற்படுகிற ஒரு சந்தேகம். முறையில்லாமல் கர்ப்பத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வது, கரு தங்குவதை அதிகப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்ப்பம் : இது, நீங்கள் சாப்பிடு மருந்து, உங்களது உடல் நிலை… எவ்வள நாட்கள் மறந்தீர்கள், எவ்வளவு கால இடைவேளியில் சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொருத்து வேறுபடும். இரண்டு நாட்களுக்கும் மேல் நீங்கள் மாத்திரை சாப்பிட மறந்து பாதுகாப்பு அற்ற முறையில் உடலுறவு கொண்டால் ப்ரெக்னென்சி டெஸ் எடுத்துப் பார்ப்பது நல்லது. பன்னிரெண்டு மணி நேரங்களுக்கும் குறைவாக :

 

 

கர்ப்பத்தடை மாத்திரை சாப்பிட ஆரம்பித்து நீங்கள் தொடர்ந்து சாப்பிடும் நேரம் கடந்து சென்று விட்டால் நீங்கள் பயப்பட வேண்டாம். அதுவும் பன்னிரெண்டு மணி நேரங்களுக்கு உட்ப்பட்டு இருந்தால் நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இப்போதே… அதாவது நீங்கள் மாத்திரை சாப்பிடாமல் விட்டுவிட்டோம் என்று நினக்கும் நேரத்திற்கே நீங்கள் மறந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். மறுநாளிலிருந்து வழக்கமாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். பன்னிரெண்டு மணி நேரங்களுக்கும் மேல் : இதே நீங்கள் மாத்திரை சாப்பிட மறந்து பன்னிரெண்டு மணி நேரங்களுக்கும் அதிகமாக சென்று விட்டால் தான் உங்களுக்கு பிரச்சனை ஏற்படும். மறந்த மாத்திரை மற்றும் மறுநாள்…. அதாவது அன்றைய தினம் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரை.. என ஒரே நேரத்தில் இரண்டு மாத்திரைகள் சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இப்படி ஒரே நாளில் இரண்டு மாத்திரைகளை சாப்பிடக்கூடாது. ஒரு வாரம் : இப்படி மாத்திரை மறந்து தாம்பத்தியத்தில் ஈடுபட

 

 

வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒன்று பாதுகாப்பான முறையில் ஈடுபடலாம் அப்படியில்லை எனில், எமர்ஜென்சி பில்ஸ் இருக்கிறது அதனை 24 மணி நேரங்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்தால் கர்ப்பமாவதை தடுக்க முடியும். மாத்திரை மறந்து, குறைந்தது ஒரு வார காலத்திற்கு தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பது சிறந்தது. மாத்திரைகள் : இவை ப்ரோஜெஸ்டீன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் என கலந்திருக்கும் இரண்டு ஹார்மோன்களைக் கொண்ட மாத்திரைகளுக்கு மட்டுமே பொருந்தும். ப்ரோஜெஸ்டீன் மட்டும் கொண்ட மாத்திரையை உட்கொள்கிறவர்கள் என்றால் மருத்துவர் சொன்ன நேரத்தை விட இரண்டு மணி நேரங்கள் தாமதமாக சாப்பிடலாம். ஒரு நாள் இப்படித் தவறினால், மறந்த மாத்திரையை உடனே எடுத்துக் கொள்ளலாம்

Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors