கீரை சாகுபடி,keerai sagupadi tips in tamil

முருங்கை சாகுபடி

முருங்கை தாயகம் இலங்கை. தண்ணீர் அதிகமாக தேவை படாத ஒரு பணப்பயிர். தற்போது நடைமுறையில் இரண்டு ரகங்கள் வியாபார ரீதியான பயிரிடப்படுகின்றன. அதாவது செடி முருங்கை மற்றும் மரமுருங்கை.

செடி முருங்கை ரகங்கள் Pkm 1,2 .

மர வகையில் பள்ளப்பட்டி மற்றும் யாழ்ப்பாணம் முருங்கை , இவைகள் நாட்டு ரகங்கள் ஆகும்

கீரை சாகுபடி,keerai sagupadi tips in tamil

pkm 2 ரகம் pkm 1 ரகத்தை விட நீளமான காய்கள் இருப்பதால் தொலை தூர சந்தைகளுக்கு அனுப்புவது சற்று சிக்கல்.

செடி முருங்கை விதைகள் மூலம் மரமுருங்கை போத்து குச்சிகள் மூலம் நடப்படுகிறது.

செடி முருங்கை விதை களை tray க்களில் நட்டு செடிகள் முளைத்த பின்பு இருபது நாள் நாற்று நடலாம் .வளர்ச்சி நன்கு வர மண்புழு உரத்தை தேங்காய் நார் கழிவு உடன் சேர்ப்பது நல்லது.

இடைவெளி செடி முருங்கை பத்து முதல் பதினைந்து அடி மரமுருங்கை இருபது முதல் முப்பது அடி வரை. குழி 1×1 அடி.

இரண்டு முறை நுனி கிள்ளி விடுவதன் மூலம் அதிக துளிர் அதிக கிளைகள். அதிக பூக்கள் அதிக காய்கள். அதிக மகசூல் பெறலாம்.

செடி முருங்கை நட்ட ஆறு மாதங்களுக்குள் காய்ப்புக்கு வரும். காய்ப்பு முடிந்தவுடன் தரையில் இருந்து இரண்டு அடி விட்டு வெட்டி விட வேண்டும். இது போன்று குறைந்து நான்கு முறை விடலாம். மரமுருங்கை க்கு தேவைப்பட்டால் கவாத்து.

மரமுருங்கை துளிர் வந்த உடனே பூக்கள் வரும் அதை கிள்ளி விட்டு. செடி சற்று வளர்ந்த பிறகு பூக்கள் விடலாம். கண்டிப்பாக தண்ணீர் தேங்க கூடாது.

மண்புழு உரம். மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல். உயிர் உரங்கள் இவற்றை தொடர்ந்து வேரில் இடுவதால் திரட்சியான மற்றும் எடை அதிகமான காய்கள் பெறலாம்.

முருங்கையை அதிகம் தாக்குவது கம்பளிப் பூச்சிகள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள். அடுத்து மரங்களை துளைக்கும் புழு .இவற்றை எளிதாக கற்பூரகரைசல் மூலம் எளிதாக கட்டுபடுத்தலாம்.

மீன் அமினோ அமிலம் இலைகள் மீது தெளிப்பதாலும் வேரில் இடுவதாலும் கரும்பச்சை நிற இலைகளை பெறலாம். மற்றும் அதிக வளர்ச்சியும் இருக்கும் என்று சென்னையை சேர்ந்த விவசாயி ஸ்ரீதர் கூறினார்.

இயற்கை முறை கீரையில் பூச்சி கட்டுப்பாடு பற்றி விளக்குகிறார் ராஜபாளையத்தை சார்ந்த காளான் மணி

இயற்கை மற்றும் உயர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி கீரை சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம், சிறுகீரை, முளைக்கீரை, பொன்னாங்கன்னிகீரை, வெந்தையக்கீரை என அனைத்து வகை கீரையின் இலையும், தண்டும் நாம் உட்கொள்ளும் பகுதிகள்.

இவற்றின் மீது பூச்சிமருந்து தெளிக்கக் கூடாது.

இலை உண்ணும் புழுக்கள் தோன்றும் போதே, ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். அத்துடன் காதி சோப்பை சேர்ப்பதால், அது நீரையும் எண்ணையையும் ஒட்டும் திரவமாகப் பயன்படும்.இவ்வாறான முறைகளைப் பின்பற்றும்போது விவசாயிகளுக்குக் குறைந்த செலவே ஆகும்.

மேலும், விஷமற்ற காய்கறிகளை உற்பத்தி செய்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்தால், அதிக விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

கீரை தேவை இன்று அதிகரித்து உள்ளது. ஆனால் அது உற்பத்தி செய்யும் முறைதான் மக்களிடத்தில் பயமாக உள்ளது. இதை போக்கும் விதமாக மக்களுக்கு புரியவைத்து நேரடியாக சந்தைபடுத்த முயச்சிக்க வேண்டும்(இயற்கை விவசாயமுறை உற்பத்தியினை எடுத்து கூறி முதலில் குறைந்த விலைக்கு வழங்கவேண்டும். நாமும் உற்பத்தி என்றால் தனியாக பயிர்செய்யாமல் ஊடுபயிர் போன்றோ அல்லது நிலத்தின் ஓரத்தில் தானாக விளைந்த கீரையினை எதுவாக இருந்தாலும் முதலில் சந்தைபடுத்த வேண்டும். சந்தையில் தேவை அதிகரிக்கும் போது தனியாக பயிர் செய்வது நன்று என்று லக்க்ஷிமிகாந்த் கூறுகிறார்
பருவ காலங்களுக்கு ஏற்ற கீரைகள் பற்றி விவரிக்கிறார் தேன்மொழி:

மற்ற உணவுகளைப் போல் கீரை உணவு கிடையாது. மற்றவற்றில் இல்லாத கிடைக்காத பல நல்ல விசயங்கள் கீரைகளில் உள்ளன. அவற்றை முழுமையாகக் கிடைக்க தட்பவெப்பநிலைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இளவேனில்– அரைக்கீரை,புளிச்சக்கீரை தவிர்த்தல்.

முதுவேனில் – அரைக்கீரை, முள்ளங்கிக்கீரை, கீரைத்தண்டு, சிறுகீரை பருப்புக்கீரை போன்றவற்றைத் தவிர்து மற்றதை சேர்த்தல் வேண்டும்.

கார்காலம் – சிறுகீரை பருப்புக்கீரை வெந்தயக்கீரை முள்ளங்கிக்கீரை பிண்ணாக்குக்கீரை மூக்கிரட்டைக்கீரை துத்திக்கீரை பசலைக்கீரை போன்றவை தவிர்த்தல்.

கூதிர் காலம் -அகத்திக்கீரை ஆரைக்கீரை கானாம் வாழைக்கீரை சிறுகீரை பருப்புக்கீரை பிண்ணாக்குக்கீரை பண்ணைக்கீரை தண்டுக்கீரை பொடுதலைக்கீரை முள்ளங்கிக்கீரை மூக்கிரட்டைக்கீரை தவிர்த்தல்.

முன்பனிக்காலம் – அகத்திக்கீரை சிறுகீரை பசலைக்கீரை மூக்கிரட்டைக்கீரை தவிர்த்தல்.

பின்பனிக் காலம் – சிறுகீரை பருப்புக்கீரை பாலக்கீரை மூக்கிரட்டை பசலைக்கீரை தவிர்த்தல்.

எல்லா நாள்களிலும் சாப்பிடக்கூடியவை – பொன்னாங்கண்ணி முருங்கை மணத்தக்காளி கரிசலாங்கண்ணி கறிவேப்பிலை புதினா கொத்தமல்லி. எப்படி வேண்டுமானாலும் இவற்றைச் சாப்பிடலாம். பொதுவாக கீரைகள் அனைத்துமே மருத்துவ குணமிக்கவை.
பண்ணைக்கீரை தொய்யக்கீரை இரண்டும் வேறு வேறு கீரைகள்.
பண்ணை கீரை என்பது களை என்றே கூறுகிறேனன்.
மேலும் தொய்யக்கீரை நல்ல வேர்முடிச்சுக்கள் உள்ளது.

கீரை பொடிமுருங்கையை பிரம்ம விருட்சம் என போற்றுகின்றோம், இதை நாம் சமைத்து சத்துக்களை வீனாக்கிவிடுகிறோம்,

வெந்த முருங்கை மருந்துக்கு உதவாது!
வெந்து கெட்டது முருங்கை!

இதை கறிவேப்பிலை பொடிபோல் அரைத்து உபயோகப் படுத்தலாம் என்று நாமக்கல்லை சார்ந்த விவசாயி தேன்மொழி கூறுகிறார் :

2 படி அரிசி பிடிக்கும் பாத்திரம் அளவு உருவிய முருங்கை கீரை. அலசி நிழலில் காயவைத்து அதனுடன் மிளகு 50கிராம், ஊளுந்து 50கிராம், 50கிராம் கடலைப்பருப்பு, இந்துப்பு அரை டீஸ்பூன்,சிறிது பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்தது இந்தப் பொடி.

100 கிராம் மமுருங்கையில் உள்ள சத்துகள்:

நீர்ச்சத்து – 76%
புரதம் -6.5%
கொழுப்பு -1.5
தாது -2.2
நார்ச்சத்து-1
மாவு -12.5
கால்சியம் -435மி.கி
பாஸ்பரஸ் -70 மி.கி
இரும்பு -7மி.கி
வைட்டமின்C-220 மி.கி
பி.காம்ப்ளக்ஸ் – சிறிதளவு.
கலோரி – 92

கீரைகளின் அரசி முருங்கை , காயவைத்துப் பொடி செய்து டீ தூளுக்கு மாற்றாக முருங்கை டீ பருகலாம். பொடி கிலோ 2000 ரூ வரை விற்கிறதாம்.

உண்மையை உரக்கச் சொல்ல விழைகிறேன். சாதாரண தள்ளுவண்டியில் பழைய இரும்புக்கும் தகரத்திற்கும் விற்கப்பட்ட ஒரு சில சத்து கொண்ட பேரீச்சை இன்று எட்டாக்கனியாய் உயிர்காக்கும் மருந்தென உச்சாணிக்கொம்பில்… அனைத்து சத்துக்களும் கொண்ட நம்மரபுணவு கீரை வகைகள் அன்று முதல் இன்று வரை அதே பிளாட்பாரங்களில் ஐந்திற்கும் பத்திற்கும் அல்லாடி. இந்நிலை மாற்றப்பட உயர் உயிர்நாடிக்குழுவினர் பங்களிப்பாய் கீரை பயிரிடுவார்கள் என்று நம்பிகை விதைக்கிறார் எழில் உழத்தி அவர்கள், மேலும் அவர்கள் தெளிப்பான் மூலம் காலை, மாலை – ½ மணி நேரம் பாத்தி நனைய ஆன நேரம் – காய்தலும் பாய்தலுமாய் – காலை நீர் விட்ட பின் அறுவடை செய்கிறார்களாம்.

மணத்தக்காளி சாகுபடி

இன்று மணத்தக்காளி சாகுபடி பற்றி சிறிய பதிவினை காண்போம் பலராலும் விரும்பிச் சாப்பிடப்படும் கீரை வகைகளில் இம்மூலிகையும் ஒன்று

வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் மணற்பாங்கான மற்றும் கரிசல் மண் பூமிகளில் உள்ளது.

பூக்கள் வெண்மையாய் இருக்கும். காய்கள் கருமையாகவும், கரும்பச்சையாகவும் காணப்படும். பழுக்கும்போது சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களோடு இருக்கும்.

இதனுடைய இலை, தண்டு, கனி எல்லாவற்றையும் உணவு மற்றும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

இது ஒரு சிறந்த ஊடு பயிராகும். விவசாயிகள் அதனை சரியான முறையில் காயவைத்து மூலிகை கம்பெனிகளுக்கு விற்பனை செய்யலாம்.

இம்மூலிகையானது வாய் புண், குடல் புண் மற்றும் கல்லீரல் வீக்கத்தைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது

இனி சாகுபடி முறையை பார்க்கலாம்

விதைகள் மூலமே இது உற்பத்தி செய்யப் படுகிறது. எல்லா வகை மண்ணிலும் வளரும்.

பழங்கள் காயவைக்கப்பட்டு விதைகள் சேகரித்து சாம்பலுடன் கலந்து படுக்கைகள் அமைத்து விதை தூவப்பட வேண்டும்.

keerai-2

ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவைப் படுகிறது. தொழு உரம் இடுவது மிகவும் அவசியமாகும்.

6 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் கன்றுகளை பிரித்து வயலில் நடலாம். தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். கன்றுகள் 30 செ.மீ. து 45 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும். நட்ட செடிகள் மூன்று மாத இடைவெளியில் 120 செ.மீ. வரை வளரும். இதனுடைய மொத்த சாகுபடி காலம் 120 நாட்கள் மட்டுமே.

அறுவடை

செடிகள் வேருடன் பறிக்கப்பட்டு, வேர் பாகம் தவிர்த்து மேல் பகுதிகளான இலை, தண்டு முதலியன துண்டு துண்டாக வெட்டி காய வைக்க வேண்டும். காkeerai-3ய வைப்பதற்கு முன் பழங்களை பறித்து விடுவதன் மூலம் விரைவாக காயவும் மற்றும் பூசானம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

மூன்று நாட்கள் வரை நன்கு காய்ந்தபின் சாக்கு பைகளில் நிரப்ப வேண்டும்.

காய்ந்த செடியில் ஈரப்பதம் 8%க்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிமென்ட் களம் மற்றும் தார்பாலின் கொண்டு காயவைப்பதன் மூலம் மற்ற தாவரங்கள், மண், கல் ஆகியவை கலந்துவிடாமல் தவிர்க்க முடியும்.

ஒரு ஏக்கருக்கு 1000-1500 கிலோ வரை காய்ந்த மகசூலை எதிர்பார்க்கலாம். தற்போது ஒரு டன் ரூபாய் 30,000 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

சந்தைப்படுத்துதல்

இன்று ஆர்கானிக் மருந்து கம்பெனிகளுக்கும் இதனுடைய தேவை அதிகமாக உள்ளது.

பெங்களூருவில் உள்ள நேச்சுரல் ரெமடிஸ் போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்வதுடன் ஒப்பந்த சாகுபடியையும் ஊக்குவிக்கின்றன. கம்பெனிகளுக்கு அனுப்பும்போது பயிரிட்டதற்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். சான்றிதழை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்தும் பெறலாம்.

புதுக்கோட்டை கண்ணனின் சாகுபடி முறையை இனி காண்போம்.

நிலத்தை தயார் செய்தல். 50 சென்ட் நிலத்தில் பத்து டன் குப்பை உரத்தை (மாட்டு சாணம் ஆட்டுப்புழுக்கை கலந்தது) கொட்டி 5 கலப்பை கொண்டு நிலத்தை உழுது ஆறவிட வேண்டும். பிறகு 4 கலப்பை மூலம் உழுது நிலத்தை மட்டம் தட்டி பரம்படிக்க வேண்டும்பிறகு 10 அடிக்கு 10 அடி (பாத்தி அளவுகள் உங்கள் விருப்பம் போல் அமைத்துக் கொள்ளலாம்) அளவில் சதுரப் பாத்திகளை அமைக்க வேண்டும்.50 சென்ட் நிலத்தில் சராசரியாக 200 பாத்திகளை அமைக்கலாம்.

கீரை விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். அவை மிகவும் சிறியவையாக இருப்பதால் பீஜாமிர்தம் அல்லது அமுத கரைசலில் முக்கி எடுப்பதைவிட அந்த விதைகளை சுத்தமான தரையில் பரப்பி அதன் மீது கரைசலை தெளித்து விடுவது எளிதாக இருக்கும்.விதை நேர்த்திக்கு பிறகு அனைத்துப் பாத்திகளிலும் ஒரே ரக கீரையை விதைக்காமல் ஒரு பாத்திக்கு ஒரு ரகம் என மாற்றி மாற்றி விதைக்க வேண்டும். இந்த அளவில் அமைக்கப்படும் பாத்திக்கு 50 gm விதையை தூவினால் போதும். பாத்திகளின் அளவு பொறுத்து கீரை சாகுபடிக்கு செழுமையான நீர் பாசனம் தேவை. எனவே விதைகளை தூவிய பிறகு கைகளால் விதைகளை நன்றாக பரப்பி பாத்திகளில் தண்ணீர் நிற்பது போல பாசனம் செய்ய வேண்டும். விதைகளின் அளவு மாறுபடும். கீரை சாகுபடிக்கு செழுமையான நீர் பாசனம் தேவை. எனவே விதைகளை தூவிய பிறகு கைகளால் விதைகளை நன்றாக பரப்பி பாத்திகளில் தண்ணீர் நிற்பது போல பாசனம் செய்ய வேண்டும். ஐந்து நாட்களில் கீரை தழையத் தொடங்கும் நான்கு நாட்களுக்கு ஒருமுறை பாத்தி நன்றாக நனையுமாறு பாசனம் செய்தால் போதுமானது. 15 ம் நாள் களை எடுத்து செம்பூச்சித் தாக்குதல் நிகழாமல் தடுக்க ஒரு பாத்திக்கு வேப்பங்கொட்டை 10 gm பிரண்டைக்கொழுந்து 2 gm கோழிக்கழிவு 2 gm. சோற்றுக்கத்தாழை 5 gm ஆகியவற்றை கலந்து உரலில் இட்டு நன்கு இடித்து வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி மூழ்கும் வரை நீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து அதிலிருந்து வரும் கஷாயத்தை வடிகட்டி தெளிப்பான் மூலமாக கீரைகளில் தெளித்தால் பூச்சிகள் வராது. அரைக்கீரை சிறுக்கீரை பாலக்கீரை பொன்னாங்கண்ணி மணத்தக்காளி தண்டுக்கீரை போன்ற கீரைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை அறுத்து களை எடுத்து பாசனம் செய்தால் தண்டுகளில் தழைத்து அடுத்த 15 நாட்களில் மீண்டும் அறுவடைக்கு தயராகி விடும். மல்லித்தழை வெந்தியக்கீரை போன்ற கீரைகளை 30 நாட்களில் வேரோடு பிடுங்கி நிலத்தை மண்வெட்டியால் கொத்திவிட்டு மறுபடியும் விதை தூவி விடவேண்டும்.இது கீரை சாகுபடிக்கான அடிப்படை. பாத்தியின் அளவு உரம் அளித்தல் இயற்கை பூச்சி விரட்டி பயன்படுத்துதல் கீரை வகைககளை தேர்ந்தெடுத்தல் போன்றவை உங்களின் வசதி வாய்ப்பை பொருத்தது.

தினம் ஒரு கீரை

எளிதில் கிடைக்கக் கூடியது. விலை மலிவானது என்பதால் “கிள்ளுக்கீரை “யாக எண்ணிவிடுகிறோம். ஆப்பிள் விலை அதிகம் என்பதால் அதில் நிறையச் சத்துகள் உள்ளதாகவும் கருத்துக்கள் நிலவுகிறது. முருங்கைக்கீரைக்கு இணையான சத்துகள் ஆப்பிளால் இல்லை என்பதே உண்மை.

கீரைகளில் குளோரோஃபில் லெசித்தின்கள் ஸ்டார்ச் மெழுகுகள் அல்கலாய்டுகள் ஸ்டீராய்டுகள் கரோட்டினாய்டுகள் உள்ளன. தவிர மாலிக்,சிட்ரிக், ஆக்சாலிக் போன்ற கரிம அமிலங்களும் உள்ளன. கொழுப்பும், கார்போஹைட்ரேட்டும் மிகக் குறைந்த அளவே உள்ளன.

தாதுப்பொருள்களும் வைட்டமின்களும் அள்ளித்தரும் காப்புணவாக கீரை திகழ்கிறது.

நீங்கள் சொல்லும் பேரீச்சை விசயம் சரியே, தற்சமயம் கீரைகள் பக்கம் மக்கள் திரும்ப தொடங்கியுள்ளனர். சென்னையில் முருங்ககீரை ஏக கிராக்கி, சிறுகட்டு 25 ரூபா வரை விற்பனையாகிறது.

புதினா, கறிவேப்பிலை, வல்லாரை, கொத்தமல்லி, வெந்தயக்கீரை போன்றவற்றை துவையல் செய்து மூன்று வேளையும் சாப்பிடலாம்.

முருங்கை விதை அல்லது கிளை போதும் உருவாக. வீட்டை சுற்றி கொஞ்சூண்டு இடம் அல்லது மாடியில் ஒரு டிரம் போதும். அந்த அழகான அனுபவத்தை ரசிக்க தவறாதீர்கள் என்கிறார் சென்னையை சார்ந்த மார்கபந்து அவர்கள்!!

சென்னை கார்த்தி அவர்களின் அறிவுரை

கீரை விதை அனைத்து வகைகளின் கீரைகளின் விதைகளின் விலைவிட அதிகம் … பல முறை அறுவடை செய்யலாம்
மேலும் எந்த எந்த கீரை வகைகள் பயிர் செய்வதற்கு உண்டான பருவம் ஏற்றது பற்றி தெரிவிக்கவும்
மேலும் இதன் விதை விலை நிலவரம் தமிழ்நாடு முழுவதும் சம நிலைக்குள் இல்லாது இருப்பது போல் தெரிகிறது.. அனைத்து மாவட்டத்திற்கும் விழுப்புரம் பகுதியில் இருந்து பெறப்படுகிறது
சென்னை விலை 300 – 500 வரை கிலோ போகிறது.. உங்கள் பகுதிகளில் எவ்வாறு உள்ளது என்று தெரிப்படுத்தவும்
நம்ம குரூப் முருங்கை மதிப்பு கூட்டுதால் யாரும் செய்வதில்லை போல் உள்ளது, அதாவது மதிப்பு கூட்டி முருங்கை விதை மூலம் எண்ணெய் எடுக்கலாம் , கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம் , இலையினை தேநீருக்கு பயன் படுத்தலாம் – சந்தை விலை குறைவாக இருக்கும் பொழுது இது போல் செய்யலாம்
போரூர் டோல் கேட் அருகில் முருங்கை அடர் நடவு செய்து உள்ளார்கள் கீரைக்காக அரை அடிக்கு ஒரு செடி நல்ல வியாபாரம்
கீரை- ஓர் அற்புதமான சாத்வீக உணவு. இதில் அனைத்துச்சத்துகளும் அதிக அளவில் உள்ளன.
நீரைச்சுத்தப்படுத்த முருங்கை விதை பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள், முருங்கை விதை நீரில் உள்ள பிளோரைட் நீக்க உதவும். பிளோரைட் எலும்பை அரிக்கும் , பல்லில் கறை உண்டாக்கும்.இந்த பாதிப்பு நிலத்தில் பிளோரைட் அதிகமாக உள்ள பகுதி கிணற்று/போர் நீர் குடிப்பவர்களுக்கு இருக்கும். 20 வருடங்களுக்கு முன்பு அரசாங்கமே முருங்கை விதைகளை இட்டு பாதிப்புகளை குறைக்க அறிவுறுத்தியது

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
தவசிக்கீரை- இருமலை போக்கும்.
சாணக்கீரை- காயம் ஆற்றும்.
வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.
இன்று ஒரு தகவலுடன் ..இரா.குலோத்துங்கன்

முருங்கைக் கீரை பற்றின தொகுப்பு :

முருங்கை மரத்தில் (“Moringa oleifera”) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ தமிழர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு உணவு ஆகும்.

இதன் தாவரவியல் பெயர் “Moringa oleifera”. இதில் “muringa” என்ற பெயர் , “முருங்கை” என்ற தமிழ் வார்த்தையில் இருந்து வந்தது ஆகும்.

உயிரியல் வகைப்பாடு

திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Brassicales
குடும்பம்: Moringaceae
பேரினம்: Moringa
இனம்: M. oleifera
தண்ணீர் : 63.8%
புரதம் : 6.1%
கொழுப்பு : 10%
தாதுஉப்புக்கள் : 4%
நார்ச்சத்து : 6.4%
மாவுச்சத்து : 18.7%
வைட்டமின் ஏ : 11300/IU
வைட்டமின் பி : 0.06 மில்லி கிராம்
(தயாமின்) (100 மில்லி கிராம் கீரைக்கு)
சுண்ணாம்புச் சத்து : 440 மில்லி கிராம்
குளோரின் : 423 மில்லி கிராம்
இரும்புச் சத்து : 259 மில்லி கிராம்
ரைபோஃபிளேவின் : 0.05 மில்லி கிராம்
கந்தகச் சத்து : 137 மில்லி கிராம்
மாங்கனீஸ் : 110 மில்லி கிராம்
நிகோடினிக் அமிலம்: 0.8 மில்லி கிராம்
வைட்டமின் சி : 220 மில்லி கிராம்
முருங்கைக் கீரையில் சிறந்த உயிர்ச்சத்துக்களும், தாதுஉப்புக்களும், மாவு, புரதப் பொருட்களும், சுண்ணாம்பு, மாங்கனிஸ், மணிச்சத்து, இரும்புச் சத்துக்களும் உள்ளன.

முருங்கைக் கீரை 108 கலோரி சக்தியை நமக்குக் கொடுக்கின்றது…

கண்ணுக்கு மிகவும் நல்லது, மலச் சிக்கலைத் தீர்க்கும்.

தாது உப்புகள் இந்த கீரையில் ஓரளவுக்கு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்பு உறுதி பெறும்.

வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.

கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.

முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும்.

இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.

நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும்.

முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.

இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.
முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது.
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. { ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.
முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.
ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.
“ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை உணவுமுறை அவசியம்”

“இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்”

“ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்”

Tags:இயறக்கை முறையில் கீரை சாகுபடி · இயறக்கை வழி முறையில் கீரை சாகுபடி · இயறக்கை வழியில் கீரை சாகுபடி · கீரை சாகுபடி

Loading...
Categories: Vivasayam | விவசாயம்

Leave a Reply


Sponsors