முளைகட்டிய காராமணி கிரேவி,mulai kattiya karamani gravy cooking tips in tamil

தேவையான பொருட்கள்:

வெள்ளை காராமணி முளைகட்டியது – 1 கப்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
பூண்டு – 5
சீரகத் தூள் – கால் ஸ்பூன்
தனியாத்தூள் – 1/2 ஸ்பூன்
வேர்க்கடலை – ஒரு கைப்பிடி
தக்காளி – 1
தேங்காய் துருவல் – 1 ஸ்பூன்
பெருங்காயம் தூள் – சிறிதளவு

முளைகட்டிய காராமணி கிரேவி,mulai kattiya karamani gravy cooking tips in tamil

தாளிக்க: பட்டை, சோம்பு, கிராம்பு.

செய்முறை:

வேர்கடலையை ஊறவைத்து தேங்காய் துருவலுடன் அரைத்துகொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் ஊரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

முளைகட்டிய காராமணியைக் குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிடவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டுத் தாளித்து, அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளி, வேகவைத்த காராமணி சேர்த்துக் கொதிக்கவிடவும்.

அரைத்த வேர்க்கடலை விழுது, உப்பு, பெருங்காய தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இது பூரி, சப்பாத்தி, புல்கா, ரொட்டிக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors