பருப்பு கீரை கூட்டு,paruppu keerai kootu in tamil

துவரம் பருப்பு – 100 கிராம்
பருப்பு கீரை – ஒரு கட்டு
வெங்காயம் – இரண்டு
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
சாம்பார் பொடி – ஒரு தேக்கரண்டி (5 கிராம்)
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
மிளகு – மூன்று
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு – இரண்டு பல்
நெய் – அரை தேக்கரண்டி

 

பருப்பு கீரை கூட்டு,paruppu keerai kootu in tamil

பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
கீரையை ஆய்ந்து மண் இல்லாமல் அலசி தண்ணீரை வடிக்கட்டவும்.
எண்ணெயை காயவைத்து அதில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு கீரையை சேர்த்து வதக்கி தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் வேகவிடவும்.
வெந்ததும் வேகவைத்துள்ள பருப்பு சேர்த்து நெய்யும் சேர்த்து கிளறி கொதிக்க விட்டு இறக்கவும். இதற்கு தேங்காய் தேவையில்லை

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors