புடலங்காய் பொரிச்ச குழம்பு,pudalangai poricha kulambu in tamil

புடலங்காய் – 200 கிராம், துவரம் பருப்பு – 1/2 கப், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகுத் தூள் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு. வறுத்து அரைக்க… எண்ணெய் – 2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, துருவிய தேங்காய் – 3 ஸ்பூன், மிளகு, சீரகம் – 1 ஸ்பூன், அரிசி – 1 டீஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன், பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது. செய்முறை துவரம் பருப்பில் மஞ்சள் தூள்

 

புடலங்காய் பொரிச்ச குழம்பு,pudalangai poricha kulambu in tamil

சேர்த்து, குக்கரில் வேக வைத்து மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய், அரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். வறுத்ததை தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் புடலங்காய், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். கடாயில் வேக வைத்த பருப்பு, காய் கலவை, அரைத்த கலவை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் கடுகு, உ.பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors