சிறுகீரை பாசிப்பருப்பு கூட்டு,siru keerai pasi paruppu kootu

சிறுகீரை – ஒரு கட்டு பாசிப்பருப்பு – 50 கிராம் சின்ன வெங்காயம் – 100 கிராம் சீரகம் – 2 டீ ஸ்பூன் பூண்டு – 2 பல் தக்காளி – 1 வரமிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கொத்து செய்முறை: முதலில் சிறுகீரையை நன்றாக பொடியாக நறுக்கி இரண்டு முறை தண்ணீர் விட்டு கழுவி எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து அதில் சிறிதளவு தண்ணீரை கொதிக்க வைத்து பின்னர் பாசிப்பருப்பை போட்டு வேகவைக்கவும்.

சிறுகீரை பாசிப்பருப்பு கூட்டு,siru keerai pasi paruppu kootu
முக்கால் பதம் வெந்த உடன் அதில் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், சீரகம், வரமிளகாய், பூண்டு சேர்க்கவும். பின்னர் சிறுகீரையை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். கீரை அரைபதம் வெந்த உடன் தக்காளியை சேர்த்து வேகவிடவும். இத்துடன் உப்பு சேர்க்கவும். தண்ணீர் குறைவாக இருந்தால் போதுமானது. கீரையும், பாசிப்பருப்பும் நன்றாக வெந்த உடன் கடுகு, உளுந்து, சின்னவெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். கீரை கூட்டு தயார். பாசிப்பருப்பு கீரைக்கூட்டு சுவையோடு, சத்தும் நிறைந்தது. சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சைடு டிஷ்ஷாக பயன்படுத்தலாம். இல்லையெனில் நன்றாக மசித்து சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors