சிறுகீரை பொரியல்,siru keerai poriyal in tamil

Loading...

சிறுகீரை – 1 கட்டு (நறுக்கியது) வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது) கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,

சிறுகீரை பொரியல்,siru keerai poriyal in tamil

கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் நறுக்கிய கீரையைப் போட்டு நன்கு வதக்கி, பின் உப்பு தூவி, சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டி, மூடி வைத்து கீரையை நன்கு வேக வைக்க வேண்டும். கீரையானது நன்கு வெந்ததும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், சிறுகீரை பொரியல் ரெடி!!!

Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors