முருங்கைக் காய் பருப்பு கூட்டு,drumstick veg kootu,drumstick food list in tamil

தேவையான பொருட்கள்:

முருங்கை காய் – 3

பருப்பு – 1 கப்

சாம்பார் தூள் – 1 & 1/4 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

கடுகு, – 1/4 தேக்கரண்டி

காயத் தூள் – ஒரு சிட்டிகை

தேங்காய் துருவல் – 3 மேஜைக்கரண்டி

சீரகம் – 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

 

முருங்கைக் காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அதனை பானில் வைத்து 1 கப் நீர் சேர்த்து சாம்பார் தூள் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்

பிரஷர் குக்கரில் பருப்பு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேக வைக்கவும்

தேங்காய் துருவல் மற்றும் ஜீரகத்தை நீா் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

முருங்கைக் காய் வெந்ததும் அதனுடன் வேக வைத்த பருப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்

நன்கு கலக்கி வேக வைக்கவும்

பின்பு கடுகு பெருங்காயம் மற்றும் கறி வேப்பிலையை தாளித்து அதனுடன் சேர்க்கவும்

முருங்கைக் காய் கூட்டு ரெடி.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors