இனிப்பு உளுந்து வடை,inippu ulundu vadai

இனிப்பு உளுந்து வடை

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு – 1/4 கிலோ
சர்க்கரை – 1/4 கிலோ
அரிசி மாவு – 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – 1/2 லிட்டர்

 

செய்முறை

1. உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து சிறிது தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போதே அரிசி மாவும் உப்பும் சேர்த்து அரைக்கவும்.

2. வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து, பிசுபிசு பதத்தில் பாகு காய்ச்சவும். இதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள உளுந்து மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து சர்க்கரைப் பாவில் போட்டு ஊற விடவும்.

4. சிறிது நேரம் கழித்து பாகில் இருந்து வடையை எடுத்து பரிமாறவும்.

குறிப்பு

1. உளுந்தை தண்ணீர் நிறைய சேர்த்து அரைத்தால் எண்ணெய் அதிகம் செலவாகும்.

2. உளுந்தை கெட்டியாக அரைத்தால் அரிசி மாவு சேர்க்கத் தேவையில்லை.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, Vadai Recipe In tamil, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors