கொண்டக்கடலை குழம்பு,kondai kadalai kulambu,Tamil Cooking Tips

தேவையானவை :

கொண்டக்கடலை – 1/2கப்

வெங்காயம் – 1

கடுகு – 1/4தேக்கரண்டி

உப்பு – தேவையானவை

மல்லியிலை -2 தேக்கரண்டி

எண்ணெய் -1 தேக்கரண்டி

கருவேப்பிலை -சிறிது

வறுத்து அரைப்பதற்கு :

வெங்காயம் -1

வர மிளகாய் – 3

பூண்டு – 4

இஞ்சி – 1”

பட்டை – 1

கிராம்பு – 2

சோம்பு – 1தேக்கரண்டி

கசகசா -1/4 தேக்கரண்டி

சீரகம் – 1/2தேக்கரண்டி

வரமல்லி – 3தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4தேக்கரண்டி

வறுத்த கடலை – 1தேக்கரண்டி

தேங்காய் – 3தேக்கரண்டி

எண்ணெய் – 1தேக்கரண்டி

கருவேப்பிலை -சிறிது

 

செய்முறை :

அ) கொண்டக்கடலையை 8 மணிநேரம் ஊறவைத்து , குக்கரில் உப்பு , தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும்.

ஆ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி அரைக்கும் பொருட்களை பின்வருமாறு சேர்க்கவும் – வெங்காயம் , மிளகாய் ,இஞ்சி , பூண்டு , பட்டை , கிராம்பு ,சோம்பு , கசகசா , வரமல்லி , சீரகம் , மஞ்சள் தூள் ,கருவேப்பிலை சேர்த்து ,மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.

இ) மேலேயுள்ள பொருட்கள் வறுத்தவுடன் , அடுப்பில் இருந்து இறக்கி, வறுத்த கடலை , தேங்காய் சேர்த்து ஒரு முறை கலக்கவும் ( கடலை , தேங்காய் வறுக்கத்தேவையில்லை).

ஈ) சூடு ஆறியவுடன் வறுத்த பொருட்களை தேவையானளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

உ) பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி , கடுகு சேர்த்து பொறிந்தபின் , வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி ,அரைத்த விழுதை சேர்த்து ,ஒரு கொதி விடவும்.

ஊ) குழம்பு கொதிக்காரம்பித்தவுடன் வேகவைத்த கொண்டைக்கடலையை அதன் தண்ணீருடன் சேர்த்து குழம்பில் ஊற்றி , கெட்டியாகவும் வரை கொதிக்கவிடவும்.

எ) இறுதியாக மல்லியிலை தூவி , அடுப்பில் இருந்து இறக்கி , இட்லி ,தோசை , சப்பாத்தி , ஆப்பம் என்று உங்கள் விருப்பம் போல் பரிமாறவும்.

குறிப்பு :

அ) வரமல்லிக்கு பதில் மல்லிப்பொடியும் சேர்க்கலாம் ,பொடி சேர்ப்பதாக இருந்தால் தேங்காயுடன் சேர்த்து சேர்க்கவும்.

Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors