பச்சை பயிறு குருமா,pachai payaru kuruma in tamil

பச்சை பயிறு குருமா செய்ய தேவையான பொருட்கள்:

 1. பச்சை பயிறு – 200  கிராம்
 2. வெங்காயம் – 2
 3. தக்காளி – 3
 4. இஞ்சி, பூண்டு விழுது – 1 டீ ஸ்பூன்
 5. பச்சை மிளகாய் – 2
 6. மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்
 7. பட்டை, கிராம்பு, ஏலக்காய்
 8. தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
 9.  பொட்டுக்கடலை – 1 டீ ஸ்பூன்
 10. முந்திரி – 5
 11. எண்ணெய் -2 டீ ஸ்பூன்
 12. உப்பு – தேவையான அளவு
 13. தண்ணீர் – தேவையான அளவு

குருமா செய்யும் முறை:
 1. பச்சை பயிறு முதல் நாளே ஊற வைக்கலாம்.
 2. திடீர் என்று செய்ய வேண்டும் என்றால் பச்சை பயிறை எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
 3. வறுத்ததை தண்ணீரில் அலசி குக்கரில் போட்டு வேக விடவும். 2 விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் விடவும்.
 4. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய்  சேர்த்து வறுத்து  5 வினாடிக்குப் பிறகு இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 5. தக்காளியை அரைத்து சேர்த்து வதக்கவும்.
 6. நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், உப்பு, போட்டு தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக விடவும்.
 7. இதனுடன் வேக வைத்த பச்சை பயிரை சேர்த்து கொதிக்க விடவும்.
 8. முந்திரியை ஊற வைத்து அதனுடன் தேங்காய் துருவல்  பச்சை மிளகாய், பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து கொதிக்கும் கிரேவியில் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
 9. பச்சை பயிறு குருமா தயார்.
சப்பாத்தி, பூரி. தோசை யுடன் சாப்பிடலாம்.
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors