பச்சை பயிறு பனியாரம்,pachai payaru paniyaram

தேவையான பொருட்கள் :

பச்சை பயிறு (அ) பாசி பருப்பு –  1 கப்
வெல்லம்  – 1/2 கப் (பொடித்தது)
அரிசி மாவு – 1/4 கப்
உப்பு  –  சிறிதளவு
எண்ணெய்  –  பொரிப்பதற்கு தேவையான அளவு
ஏலக்காய் பொடி  – 1 டீஸ்பூன்

 

செய்முறை :

  • பாசி பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
  • இதனுடன் வெல்லம், அரிசி மாவு, உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து வெல்லம் கரையும் வரை கிளறவும். இட்லி மாவு பதத்தில் கலக்கவும்.
  • பின் ஒரு வாணலியில் எண்ணெய்யிட்டு சூடானதும் ஒரு கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் சிறிது சிறிதாக ஊற்றவும். பின் மிதமான தீயில் வைத்து வேகவைத்து எடுக்கவும.
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors