பச்சை பயிறு உருண்டை,pachai payaru urundai recipe in tamil

முழு பாசிப்பருப்பு – ஒரு கப்
வெல்லம் – அரை கட்டி
முந்திரி – 10
துருவிய தேங்காய் – அரை கப்
பால் பவுடர் – 4 தேக்கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

பாசிப்பருப்பை வேக வைத்து மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

 

வெல்லத்தை பாகு காய்ச்சி வைக்கவும்.

அரைத்து வைத்துள்ள பருப்புடன் 2 தேக்கரண்டி பால் பவுடர், துருவிய தேங்காய் மற்றும் சிறு துண்டுகளாக உடைத்த முந்திரி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

அத்துடன் வெல்லப் பாகு மற்றும் நெய் ஊற்றி உருண்டை பிடிக்கும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

ஒரு தட்டில் மீதமுள்ள பால் பவுடரைக் கொட்டிக் கொண்டு பிசைந்து வைத்துள்ள பயிறுக் கலவையை எடுத்து உருண்டைகளாக உருட்டி பால் பவுடரில் பிரட்டி எடுக்கவும்.

சுவையான பயிறு உருண்டை தயார்.

இனிப்பை அதிகமாக விரும்புபவர்கள் வெல்லத்தின் அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தேவையெனில் பொடித்த பாதாம் மற்றும் பிஸ்தா சேர்த்துக் கொள்ளலாம்.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors