கத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்

கத்தரிக்காய் – அரை கிலோ
உருளைக்கிழங்கு – அரை கிலோ
கடுகு – அரை தே‌க்கர‌ண்டி
வரமிளகாய் – 2
பெருங்காயம் – 1 சிட்டிகைமஞ்சள் தூள் – அரை தே‌க்கர‌ண்டி
தனியா பொடி – அரை தே‌க்கர‌ண்டி
சீரகப் பொடி – அரை தே‌க்கர‌ண்டி
‌மிளகா‌ய் பொடி – அரை தே‌க்கர‌ண்டி
கருவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

 

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு, எ‌ண்ணெ‌ய் கா‌ய்‌ந்தது‌ம் கடுகு, பெருங்காயம், வரமிளகாய் போட்டு தாளிக்க வேண்டும்.
பிறகு நிளத்துண்டங்களாக நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு உடையாமல் ஒன்றோடொன்று ஒட்டாமல் வதக்க வேண்டும்.

வதங்கிய பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நீளமாக, மெல்லியதாக நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு உடையாமல் பொன்னிறமாக வதக்கவும்.
வதங்கிய பிறகு மஞ்சள் தூள், தனியா தூள், சீரகத்தூள், காரப் பொடி போட்டுக் கலந்து, கத்தரிக்காயையும் போட்டுக் கலந்து தேவையான உப்பு சேர்த்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இது வித்தியாசமான ரு‌சியுட‌ன் இ‌ரு‌க்கு‌ம். இது சப்பாத்திக்கு ஏற்றது.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors