செட்டிநாட்டு கத்தரிக்காய் கூட்டு

ற்று பெரிய கத்தரிக்காய் & 6 (சிறு சதுரமாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் & 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது)
துவரம் பருப்பு & 50 கிராம்
மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை
உப்பு & தேவைக்கேற்ப
சாம்பார் பொடி & ஒரு ஸ்பூன்
தாளிப்பதற்கு:
கடுகு & ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு & ஒரு ஸ்பூன்
எண்ணெய் & 3 ஸ்பூன்
வரமிளகாய் & 1 (இரண்டாகக் கிள்ளியது)
கறிவேப்பிலை & ஒரு ஆர்க்

துவரம் பருப்பு, மஞ்சள் தூளை தண்ணீர் சேர்த்து  அவியலாக வேகவைத்துக் கொள்ளவும். நறுக்கிய கத்தரிக்காயைத் தண்ணீரில் போட்டு அலசி எடுத்து, நறுக்கிய வெங்காயத்துடன் சேர்த்து அவிந்த பருப்புடன்போடவும்.

சாம்பார்ப் பொடி சேர்த்து வேகவிடவும் காய் அவிந்ததும் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து, வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் தாளிப்பவற்றை போட்டுத் தாளித்து, கூட்டில் ஊற்றிக் கொதித்ததும் இறக்கவும்.
புடலங்காய் மீது மென்மையாக, காம்புப் பகுதி முற்றல் இல்லால், இளம் பச்சை நிறமுடையதாக பார்த வாங்கவும்.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors