வெள்ளரிக்கா கிச்சடி

தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் (சிறிதாக நறுக்கியது) – 2 கப்
தயிர் (புளிக்காத்து) – 1 கப்
துருவிய தேங்காய் – ½ கப்
பச்சை மிளகாய் (சிறிதாக நறுக்கியது) – 3
சிறிய வெங்காயம் – 2
சீரகம் – ½ தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு

செய்முறை
சிறிய வெங்காயம், சீரகம், துருவிய தேங்காய் ஆகியவற்றை நன்றாக அரைக்கவும். அதில் பொடியாக்கிய கடுகினைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

வெள்ளரிக்காய், மிளகாய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பாத்திரத்திலுள்ள நீர் முழுவதும் வற்றியதும் அரைத்து வைக்கப்பட்ட தேங்காய் விழுதினைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

கடுகு மிளகாய் வற்றல், கறி வேப்பிலை சேர்த்து கடுகு பொரித்த்தும் கலவையோடு சேர்க்கவும். இந்தக் கலவை நன்கு ஆறிய பின்னர் அதோடு தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors