அவகோடா – வெள்ளரிக்காய் சாலட்,AVOCADO Vellari SALAD IN TAMIL

தேவையான பொருட்கள் :

தக்காளி – 2
அவகோடா – 2
வெங்காயம் – 2
வெள்ளரிக்காய் – 1
வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம்பழம் – 1
ஆலிவ் ஆயில் – 1 டேபிள்ஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகு தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு.


செய்முறை :

அவகோடாவின் கொட்டையை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய அவகோடா, தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை போட்டு அதனுடன் [பாட்டி மசாலா] மிளகு தூள், வினிகர், ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

கடைசியாக எலுமிச்சம் பழச்சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து அரை மணிநேரம் ஊறவைத்து பரிமாறவும்.

சூப்பரான அவகோடா – வெள்ளரிக்காய் சாலட் ரெடி.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors