பீன்ஸ் கூட்டு,beans kootu iyengar recipe in tamil

பீன்ஸ் – 200 கிராம்,
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகு 7-8,
காய்ந்தமிளகாய் – 1,
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை – சிறிது,
பெருங்காயம் – 2 சிட்டிகை,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1/4 டீஸ்பூன்.

பீன்ஸை நறுக்கி 1 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, மிளகாய், பாசிப்பருப்பு போட்டு நன்கு ெபான்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த கலவையை தேங்காய் சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்த கலவையை வெந்த பீன்ஸில் போடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். கறிவேப்பிலை, கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் சேர்க்கவும். கூட்டு தயார்

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors