வெள்ளரிக்காய் பொரியல்,vellarikka poriyal cooking tips in tamil

300 கிராம் வெள்ளரிக்காயை அரிந்து, உள்ளே இருக்கும் விதைகளை போக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.

அரைக்கால் ஆழாக்குப் பயற்றம் பருப்பை ஒன்றரை ஆழக்குத் தண்ணீரில் வேகவைத்து அதில் தயாரித்து வைத்திருக்கும் வெள்ளரிக்காய்களையும் ஒரு தேக்கரண்டி உப்பையும் போடவும்.

மிளகாய் வற்றல் இரண்டு, மிளகு ஆறு, மஞ்சள் கடலை அளவு, இவற்றை நெய்யில் வறுத்து நன்றாக அரைத்து கொட்டைப்பாக்க்கு அளவு புளியை அரை அழாக்கு தண்ணீரில் கரைத்து, வெள்ளரிக்காயில் கொட்டவும்.
காய்கள் முக்கால் பதம் வெந்ததும் தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து, நெய் இரண்டு தேக்கரண்டி விட்டுக் காய்ந்ததும் கடுகு அரைக்கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு அரை தேக்கரண்டி, சீரகம் கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று, இவைகளைப் போட்டுச் சத்தம் அடங்கினதும், அதில் வெள்ளரிக்காயைக் கொட்டி, கறிமாப் பொடி அரைத் தேக்கரண்டி போட்டு, கொத்துமல்லித் தழை பத்து ஆய்ந்து சுத்தம் செய்து போட்டு, நன்றாகப் புரட்டிக் கொடுத்து இறக்கவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors