வெள்ளரிக்காய் தக்காளி குழம்பு,vellarikka thakkali kulambu,vellarikkai samayal kuripugal

வெள்ளரிக்காய் – 2 கப் (சிறு துண்டுகள்),
உப்பு – தேவைக்கேற்ப, பச்சை மிளகாய் – 2,
வெங்காயம் (பெரியது) – 1 (துண்டு துண்டாக நறுக்கியது),
இஞ்சி-பூண்டு விழுது – 1/2
டீஸ்பூன், தக்காளி – 2,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி – அழகுப்படுத்துவதற்காக.

தாளிக்க:

எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
சீரகம்- 1/2 டீஸ்பூன்.

ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும். தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அதன் நிறம் மாறும் வரை வதக்கவும். சிறிது இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் வெள்ளரிக்காய் சேர்த்து 3 நிமிடங்கள் சமைக்கவும். 1/2 கப் தண்ணீர் சேர்த்து தீயை அதிகரித்து குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக விடவும். குளிர்ந்த பிறகு, மூடியை திறந்து அதில் தண்ணீர் இருந்தால், அந்த தண்ணீர் வற்றும் வரை சமைக்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலைகளை அழகுப்படுத்த சேர்த்துப் பரிமாறவும்

Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors