கொத்தமல்லி விதை சட்னி,kothamalli chutney in tamil

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி விதை – 100 கிராம்
மிளகாய் வற்றல் – 3 எண்ணம்
புளி – நெல்லிக்காய் அளவு
கல் உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – ஒரு எண்ணம்
கடுகு – ¼ ஸ்பூன்
வெந்தயம் – 10 எண்ணம்

செய்முறை :

முதலில் கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றலை காம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றலை சேர்த்து வறுக்கவும்.

கொத்தமல்லி விதையானது வாசனை வந்து வெடித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.

புளியை சிறிது எண்ணெய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

வறுத்த கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

பின் அதனுடன் ஊற வைத்த புளி, தேவையான அளவு கல் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம், மிளகாய் வற்றல் போட்டு தாளித்து அரைத்த கொத்தமல்லி விதைக் கலவையுடன் சேர்க்கவும்.

சுவையான கொத்தமல்லி விதை சட்னி தயார்.

இதனை இட்லி, தோசை, ஆப்பம், சாத வகைகள் ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Loading...
Categories: Chutney Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors