ஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil

தேவையான பொருட்கள்:

நாட்டுக்கோழி – 1 கிலோ
வெங்காயம் – 3,
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்,
தக்காளி – 2
தயிர் -2 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3-4 ,
மல்லி (தனியா)- 1 டேபிள் ஸ்பூன்,
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்,
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்,
பூண்டு – 3 பல்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிது,
தண்ணீர் – 1 கப்

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

மல்லி, சீரகம், தேங்காய், பூண்டு ஆகியவற்றை வாணலியில் போட்டு வறுத்து, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், கரம் மசாலா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, மசாலா சிக்கனில் படுமாறு நன்கு பிரட்டி, தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்த பிறகு, அதனை இறக்கி, அதில் கொத்தமல்லியை தூவினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு ரெடி.

இந்த ஆந்திர ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பை சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, சப்பாத்தி என எதனுடன் வைத்து சாப்பிட்டாலும், பக்காவாக இருக்கு

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors