அதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya

தேவையான பொருட்கள் :

கொள்ளு – 1 கப்,
புளி – 1 நெல்லியளவு,
சீரகம், மிளகு – 1 தேக்கரண்டி,
எண்ணெய் – 1 தேக்கரண்டி,
கடுகு – 1 தேக்கரண்டி, தூள்
பெருங்காயம் – 2 கிராம்,
பூண்டு – 6 பல்.

செய்முறை :

கொள்ளுவை வெறும் வாணலியில் வறுத்து வேகவிடவும்.

புளியை கரைத்து கொள்ளவும்.

மிளகு, சீரகத்தை பொடித்து வைக்கவும்.

பூண்டை தட்டி வைக்கவும்.

நன்கு வெந்ததும், மேலும் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். தண்ணீரில் கொள்ளு கரைந்து கெட்டியான கொள்ளுத்தண்ணீர் கிடைக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் கரைத்த புளி கரைசலை சேர்க்கவும்.

அடுத்து அதில் பொடித்த மிளகு, சீரகம், தட்டி வைத்த பூண்டை போடவும்.

புளியின் பச்சை வாடை போனவுடன், கொள்ளுத் தண்ணீரை ஊற்றி கலந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

நுரைத்து வரும் போது கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

சூப்பரான கொள்ளுரசம் ரெடி.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, Weight Loss Tips in Tamil, சைவம்

Leave a Reply


Sponsors