வீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி,tandoori chicken seivathu eppadi

தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரை கிலோ
தயிர் – 175 மில்லி (ஒரு தம்ளர்)
தந்தூரி மசாலா – சிறிதளவு
தந்தூரி கலர் பொடி – ஒரு சிட்டிகை
எலுமிச்சம்பழம் – ஒன்று
வறுத்து அரைத்த தனியா, சீரகம், மற்றும் அரைத்த இஞ்சி மற்றும் பூண்டு போன்றவை – தலா ஒரு சிறிய தேக்கரண்டி.
மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

கோழி இறைச்சியில் தோலுரித்து நான்கு துண்டுகளாக்க வேண்டும்.

கூரிய கத்தியை கொண்டு ஒவ்வொரு துண்டிலும் 2, 3 இடங்களில் கீறி விடலாம்.

வறுத்து அரைத்த தனியா, சீரகம் மற்றும் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு ஆகியவற்றை இறைச்சியில் பூசி தந்தூரி கலர் பொடி, தந்தூரி மசாலா கலந்து தயிருடன் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

மறுநாள் தந்தூரி ஓவன் அல்லது கம்பி வலை அடுப்பு மீது வைத்து தணலில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு வாட்டி எடுக்கவும்.

பின்னர் எலுமிச்சம் பழத்தை வாட்டப்பட்ட இறைச்சி மீது பிழிந்துவிட்டு சூடான தந்தூரி சிக்கனை பரிமாறவும்.

தந்தூரி சிக்கன் ரெடி.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors