வாழைப்பூ துவையல்,valaikappu thuvaiyal

வாழைப்பூ – ஒன்று
புளி – எலுமிச்சையளவு
கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 3
தேங்காய் – ஒரு கைப்பிடி
எண்ணெய் – வதக்க

தாளிக்க :

கடுகு, கறிவேப்பிலை

செய்முறை :

வாழைப்பூவை கழுவிவிட்டு, நடுவில் உள்ள காம்பு பகுதியை நீக்கி சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும்.

அதே வாணலியில் வாழைப்பூவை போட்டு நன்றாக வதக்கி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து கிளறி நன்கு சுருளும் வரை வதக்கி அதோடு தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி எடுக்கவும்.

வதக்கிய வாழைப்பூவுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், புளி, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து தாளித்து துவையலில் கொட்டி கிளறி பரிமாறவும்.

சுவையான வாழைப்புத் துவையல் ரெடி.

இதை சூடான சாதத்தில் நெய்/நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம். தயிர்சாதத்திற்கும் தொட்டு கொள்ளலாம்..

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors